09. காதல் என்பது - ஜான்சி
உன்னை விட நான் தான் அழகு என நான் சொல்ல,
"ம்ம் "தலையசைத்து சிரிப்பான்.
உன்னை விட நான் அறிவாளி என்றால்,
தயக்கமேயில்லாமல் ஒப்புக் கொள்வான்.
உன்னை விட நான் பொறுமை என்கையில்
'அதில் சந்தேகமென்ன? 'என்பான்.
உன்னை விட என் காதல் தான் பெரிது என்றால் மட்டும்,
ரௌத்திரமாய் 'இல்லையடி அது என் காதல் தான்' என்பான்.
இது தான் காதலா!
{kunena_discuss:779}