(Reading time: 1 minute)

அன்பு தேவதைகள் - ஜான்சி

Niece

செல்லச் சண்டையிடும்
கிண்டல் கேலிச் செய்தே,
என்னை வாரி விடும் 
அன்புத் தேவதைகள்...

தேவையென்று நினைக்கையிலே
தேடி வந்து தொல்லைச் செய்து- என்
சோர்வையெல்லாம் விரட்டி விடும்.
அன்புத் தேவதைகள்.

குறுக்குக் கேள்விகள் கேட்டே,
மண்டைக் காயவிடும்,
திகைத்து நிற்கையிலே
பழிப்புக் காட்டிச் செல்லும்

அன்பை பொழியும் தேவதைகள்..
அண்ணியர் பெற்ற அரும் புதல்விகள்...

Dedicated to Georgia & Joeba

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.