எல்லாவற்றிற்கும் - மனோ ரமேஷ்
ஆர்ப்பரிக்கும் நட்புகளிடமிருந்தும்
அரவணைத்த சொந்தங்களிடமிருந்தும்
தனித்திருக்க நேர்ந்த நேரங்களில்
எனக்கும் தனிமைக்கும் இடையே
சுவராய் எழுந்த முதல் இணைய நட்பிற்கு
உன்னிடம் பொய் கூற தயங்கியே
என்னை உண்ண வைத்த எங்கோயிருந்தும் என்னை
ஆட்டிபடைத்த அன்பின் ஆளுமைக்கு
நான் அறை திரும்ப தாமதிக்கும்
நாட்களில் கரித்துக்கொட்டும் அக்கறைக்கு
சென்னை வெள்ளத்தால் இலங்கையில்
மழை பொழிந்த கண்ணீருக்கு
என் தொல்லைகள் அனைத்தும்
மாறாமல் தாங்கும் பொறுமைக்கு
எனை நானே தாக்கினாலும்
எனை தாங்கும் அன்பிற்கு
மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
{kunena_discuss:779}