(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மலரினும் மெல்லிய உறவிதுவோ? - புவனேஸ்வரி கலைசெல்வி

love

இதுவரை சேர்த்த வரமா நீ?

நான் இடரி விழுந்த பூவனமா நீ?

எனக்குள் கமழ்ந்திடும் மணமா நீ?

அன்பு கொடுப்பதில் கர்ணனின் குணமா நீ?

 

அழைத்தப்போதெல்லாம் நீ வரவில்லை எனினும்

அழுத நாட்கள் இன்று நினைவில்லை!

சிரிக்கும்போதும் நீ இணையவில்லை என்னை

சிரிக்க வைக்க நீ மறக்கவில்லை!

 

மலரினும் மெல்லிய உறவிதுவோ?

அந்த மலரினில் நிம்மதியாய் உறங்கிடவோ?

நாளையின் கவலையின்றி இந்த

காளையின் தோள் சாய்ந்திடவோ?

 

தொலைந்து போக இது பயணமில்லை!

கலாவதியாக இது விருந்தில்லை!

தொலைப்பதற்கு இனி எதுவுமில்லை என்பதினால்

உன் தோள் சாயவும் எனக்கு தயக்கமில்லை!

விரக்தியின் உச்சத்தில் நிற்பவளை

விரல்நீட்டி இழுக்கப் பார்க்கிறாய்,

விலகாமல் நெருங்கிடவோ? இல்லை

விருந்தோம்பலென நின்றிடவோ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.