(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அவளும் நானும்  - புவனேஸ்வரி கலைசெல்வி

woman-and-mirror

என்னைவிட அழகி அவள்

வாய்விட்டு சிரித்திடும்போது !

 

என்னைவிட பொறுமைசாலி அவள்

காயப்படுத்தும் உறவுகளையும் ஆதரிக்கும்போது !

 

என்னைவிட திறமைசாலி அவள்

வெள்ளை காகிதத்தை கவிதை மடலாக்கிடும்போது !

 

என்னைவிட உணர்ச்சி வசப்படுபவள் அவள்

கண்ணீரில் தலையணையை நனைத்திடும்போது !

 

என்னைவிட பரிசுத்தமானவள்  அவள்

பிறரின் தவறுகளை சகிக்கும்போது !

 

என்னைவிட முட்டாள் அவள்

நகல் அன்பினில் நெகிழ்ந்திடும்போது !

 

தூரத்தில் இருந்து அவளை,

சில நாள் ரசிக்கிறேன்

சில நாள் வெறுக்கிறேன் !

பல நாள் அவள் தான் நான் என்ற

உண்மையையே மறு(ற )க்கிறேன் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.