அவனும் அவளும் - அவளும் அவனும் - புவனேஸ்வரி
விழுகின்ற அவளைக் கை தாங்கும்போது
அவன் அழகாகிறான் !

அழுகின்ற அவளின் சோகம் தீர்க்கும்போது
அவன் அழகாகிறான் !
குழந்தைத்தனமான அவளை மதிக்கும்போது
அவன் அழகாகிறான் !
தவறான அவளது முடிச்சுகளை அவிழ்க்கும்போது
அவன் அழகாகிறான் !
பேணிக்காத்த அவளது பெற்றோரை மதிக்கும்போது
அவன் அழகாகிறான் !
நண்பனாய் இன்னொருவன் அவளது கரம் பற்றுகையில் சந்தேகம்கொள்ளாதபோது
அவன் அழகாகிறான் !
நோயில் வாடும் அவளை அரவணைக்கும்போது
அவன் அழகாகிறான் !
உலகை வெறுக்கும் அவளை மீட்டெடுக்கும்போது
அவன் அழகாகிறான் !
அவளை சதைமலராய் மட்டும் பார்க்காதபோது
அவன் அழகாகிறான் !
அவள் உணர்வுகளை அங்கீகரிக்கும்போது
அவன் அழகாகிறான் !
மறைக்கின்ற அவனது கண்ணீரை துடைக்கும்போது
அவள் அழகாகிறாள் !
உரைக்கிற அவனது பொய்களை சகிக்கும்போது
அவள் அழகாகிறாள் !
சுமக்கின்ற அவனது பளுவை பகிர்கின்றபோது
அவள் அழகாகிறாள் !
முரட்டுத்தனமான அவனது அணுகலை அனுசரிக்கும்போது
அவள் அழகாகிறாள் !
சிக்கனமாய் அவன் பேசுவதை சேகரிக்கும்போது
அவள் அழகாகிறாள் !
சொல்லாமலே சமைத்து அவன் பசி தீர்க்கும்போது
அவள் அழகாகிறாள் !
ஈன்றெடுத்த அவனது பெற்றோரை பேணும்போது
அவள் அழகாகிறாள் !
இளைப்பாற அவனுக்கு மடிதரும்போது
அவள் அழகாகிறாள் !
பகிர்ந்துகொள்ளாத அவனது ரசனைகளை கண்டெடுக்கும்போது
அவள் அழகாகிறாள் !
அவனுக்கே புரியாத அவனது விழிபாஷையை புரிந்துகொள்ளும்போது
அவள் அழகாகிறாள்!
ஆணும் பெண்ணும்
ஒரே கிரகத்தில் ஒன்றாய் வாழும் இரு கிரகங்கள் !
அன்பெனும் வேலி உள்ளத்தில் எழும்போது
எல்லைகள் தொலைந்துபோகும் மாயம் நிகழ்வது இங்குதான் !
அன்பின் வழி சேர்ந்த பிறகு
ஆண் பெண் பேதமேது ?
உடல் தந்த உருவத்தை மறந்து
அன்பின்பால் அடிபணிந்து ஆட்சி செய்வோம் !
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.