(Reading time: 2 - 3 minutes)

01. ராதா கிருஷ்ணன் காதல் - அணைக்கிறான் மாதவன் - புவனேஸ்வரி

Radha krishnan

அவளை மலர்கள் பூத்திருந்த நந்தவனத்தில் அமரவைத்தோம்

மலர்வண்டுகள்   என்னவனுக்குச்  சொந்தமான என்  பெண்மையை தீண்டிச்  செல்கிறதே என்று  வருந்தினாள்!

 

அவளை நதியின் நடுவில் பாய்மரக்கப்பலில் மிதக்கவிட்டோம்

என்னவன் தீண்டாத என்னை நீர் திவலைகள்  தீண்டுவதை  விரும்பவில்லை என்று புகார் கூறினாள் !

 

அவளை ரத்தினங்களின்  மத்தியில் விளையாடவிட்டோம்

இவை என்னவனின் புன்னகைக்கு ஈடாகாது என்றாள் !

 

அவளை பறவைகளுடன் பேசவிட்டு மறைந்து  நின்றோம்

என்னவன் பெயர் சொல்லா உன்னை எப்படி ரசிப்பது என்று வினவினாள்!

 

அவளை அவனிடமே சமர்ப்பித்தோம் 

 

கண்டேன் நான் கண்டேன்

பூக்காத மலருக்குள் ஒளிந்திருந்த வாசம் கண்டேன் !

மீட்டாத வீணையின் நாதம் வரும் திசை கண்டேன் !

காய்க்காத கனியிலும் கனிந்திருந்த சுவை கண்டேன் !

கொதிக்கும் சூரியனில் குளிர்காயக்கண்டேன் !

வெண்ணிலவின் வெட்கமுகம்  கண்டேன் !

பறவைகளின் பாஷைஜாலத்தைக்  கண்டேன் !

என் வேணுகான மாதவனின்  கதகதப்பில்

இதுவரை காணாத உலகை கண்டேன் என்றாள் !!

 

எனக்குஇருக்கும்பேராசைகளில்ஒன்று , ராதாகிருஷ்ணனின்காதலைபற்றிஎழுதுவது! ஏனோஅதில்நான்வெற்றிகண்டதில்லை  இதுவரைஎவ்வளவுசிந்தித்துஎழுதினாலும்திருப்திஎன்பதுஎனக்குஎட்டாக்கனிதான் .. இருந்தும்அடிக்கடிஎன்எழுதுகோள்  எகிறிதுடிக்கிறது " மீண்டும்முயற்சிசெய் " என்று ! இதோஅந்தமுயற்சியெனும்  அருவியில்ஒருதுளிகவிதைஉங்கள்பார்வைக்கு ..நன்றி

Ratha Krishnan kathal - 02

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.