(Reading time: 2 - 3 minutes)

 02. ராதா கிருஷ்ணன் காதல் - ராதை கேட்கிறாள் - புவனேஸ்வரி

rathai ketkiral

மூங்கிலே உன்னிடம் ராதை கேட்கிறேன்

அவன் விரல்பட்டு நீ உருகினாயா  ?

அவன் இதழ்உரச நீ உயிர்பெற்றாயா ?

மூங்கிலாய் இருந்த நீ எப்படி குழலானாய் ?

 

மயிலே பெண்மயிலே உன்னிடம் ராதை கேட்கிறேன் 

உன் மயில்பிலி ஒன்று காற்றில் பறந்துவந்த காட்சி என்னவோ ?

மழை வந்து நனைத்தாலும் தோகைவிரிக்கா தேவதை நீ

கள்வனவன் என்ன சொல்லி உன் சிறகை  வாங்கினான் ?

 

வானே உன்னிடம் ராதை கேட்கிறேன்

நீலத்திற்கு  இலக்கணம் காட்டிய அழகன் நீயன்றோ ?

என்ன சொல்லி அவன் உன்னிறம் வாங்கினான் ?

அவன் எதைச்சொல்ல  கேட்டு நீ மாலையில் முகம் சிவந்தாய் ?

 

நிலமே உன்னிடம் ராதை கேட்கிறேன்

பொறுமையில் அவன் உன்னை மிஞ்சியவனாம்

தவழ்ந்தாலும் துள்ளினாலும் தாங்கிடுவாயே ?

நீ தாங்கும் பாரத்தை அவன் தாங்கலாகுமோ ?

 

பொய்கையே  உன்னிடம் ராதை கேட்கிறேன்

உன் தாமரைகள் நடத்தும் காதல் நாடகம் அறிவாயா ?

நேற்றுவரை ஆதவனுக்கு காத்திருந்த மலர்கள்

இன்று அவன் பாதம் பட்டதும் இரவில் பூத்ததென்னவோ  ?

 

" அணைக்கிறான்மாதவன் " கவிதையில்நண்பர்கள்அளித்தஊக்கத்தைவைத்தேதொடங்குகிறேன்இந்த  " கண்ணன் - ராதையின்காதல்பயணத்தை ".. இதைகவியென்றொ  அல்லதுகதையென்றொ  திடமாய்சொல்வதற்குநாணுகிறேன். ஏற்கனவேசொல்லியதுபோலஇவர்களின்உறவைஎழுதுவதற்கேபெரியதைரியம்வேண்டுமல்லவா ? ஆக, எனதுகற்பனையில்இருக்கும்கண்ணனும்ராதையும்அவ்வபோதுஎன்னிடம்சொல்லும்கதையைநான்உங்களோடுபகிர்ந்துகொள்கிறேன். நேற்றுராதைகேட்டகேள்விகளைஉங்களிடம்சேர்த்துவிட்டேன். கண்ணனிடம்விடைகளைப்  பெற்றுவிட்டுஅடுத்தகவியோடுவருகிறேன் . நன்றி

Ratha Krishnan kathal - 01

Ratha Krishnan kathal - 03

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.