(Reading time: 1 - 2 minutes)

 03. ராதா கிருஷ்ணன் காதல் - கண்ணன் சொல்கிறான் - புவனேஸ்வரி

Krishnar

மூங்கிலே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்

நீ குழலாய் மாறிப்போன இரகசியத்தை !

நங்கை அவள் விரல்களை எண்ணிக்கொண்டே

யான் உன்னை தொட்டதினால் நீ குழலானாய் !

 

மயிலே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்

மயில்பிலி பறந்து வந்த காட்சியின் பொருளை !

யான் அவளை தேடுவதை உணர்ந்த மயில்பிலி

என் காதல் மனம் சொல்லிடத்தான் உன்னை பிரிந்து பறந்தது !

 

வானே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்

உன் நீலநிறம் என்னிடத்தில் சேர்ந்த ஜாலத்தை !

கன்னியவள் மீது யான் கொண்ட பாசமே

வானளவு இருப்பதினால் வண்ணம் மாறினேன் !

 

நிலமே உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்

உன் பொறுமையின் அளவை நான் மிஞ்சியத்தின் விளக்கத்தை !

மங்கையவள் அனுதினமும் மனதில்  காதல்கீர்த்தனம் ஆட

அவள் பாதம் தாங்கி பிரிவை தாங்கிய பொறுமைசாலி யான் !

 

பொய்கையே  உன்னிடம் கண்ணன் சொல்கிறேன்

உன் தாமரைகள் இரவில் மலர்ந்த காரணத்தை !

காதல் பிரிவினால்  கண்ணன் விழிகளில் சிதறிய

கண்ணீர்த்துளியை ஏந்திடவே மலர்ந்தன  தாமரைகள் இரவில் !

Ratha Krishnan kathal - 02

Ratha Krishnan kathal - 04

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.