(Reading time: 4 - 7 minutes)

வெறும் கவிதை அல்ல - புவனேஸ்வரி 

Ithanai naalai engirunthai

ஹாய்  ப்ரண்ட்ஸ் ... நம்ம "இத்தனை நாளாய் எங்கிருந்தாய் " தொடர்கதை ஆரம்பித்து சரியாய் ஓர் ஆண்டு பூர்த்தியாகிவிட்டது ..  அதற்காக எபிசொட் தரலாம் என்று முயற்சித்தேன்... ஆனால் , சில  தடங்கல்களினால் அனுப்ப முடியவில்லை .. என்னமோ , இந்த நாள் அன்னைக்கு நம்ம கதாபாத்திரங்கள் எல்லாரையும் சில்சீக்கு கூட்டிட்டு வரணும்போல இருந்தது..அதற்காகத்தான் இந்த கவிதை தொகுப்பு :)  ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரவர் துணைக்கு சொல்லும் குட்டி கவிதை மாதிரி எழுதி இருக்கேன் ஒரு சின்ன புதிய முயற்சியில்... ஆனா நம்ம கதைப்படி , சங்கமித்ரா மட்டும் நீளமான கவிதையை சொல்வாங்க என்பதால் , மிதுவின் கவிதை மட்டும் மற்ற கவிதையின் சாயலில் இல்லாமல் இறுதி பகுதியில் இணைத்து இருக்கிறேன்... கூடிய விரைவில் அடுத்த அத்தியாயத்தையும் அனுப்புகின்றேன்... நன்றி

 

மதியழகன்  > நிலா 

நித்தமும்

நின்றாயடி

 

நின் காதல்முகத்தை

நினைவினில்காட்டி !

 

நிலவாய் என்னுள்

நிறைந்து

 

நிகழ்காலத்தையும் உறையவைத்து

நித்திரை பறித்து

 

நின்றாயடி

நிரந்தரமாய் (தாரமாய் ) ..!

 

நிலா >  மதியழகன்

மதியாலே

மதி வென்றாய் !

 

மனம் தந்து

மனம் வென்றாய் !

 

மல்லிகை தராமலே

மயங்கவைத்தாய் !

 

மந்திரம் செய்யாமலே

மது புகட்டினாய் !

 

மன்னவனே

மனதில் நிறைந்தவனே

 

மண்ணை நீங்கும் நேரத்திலும்

மடியில் ஏந்தி

மார்போடு அணைப்பாயா ?

 

ஷக்தி  > சங்கமித்ரா

சந்தித்தவேளை

சகியானாய்

 

சந்திக்காத வேளையிலெல்லாம்

சதியானாய் (வாழ்வின் )

 

சத்தமில்லாமல்

சரண்புகுந்தாய் !

 

சாகாவரம் வேண்டுமடி -என்னுள்

சங்கமித்த

 

சமுத்திரம் -உன்னை

சளைக்காமல் காதலிக்க !

 

கதிர் > காவியா

காட்சியில் நீயிருக்க

காதலை  மறந்தேனடி !

 

காவியம் நீ மறைந்ததும்

காதலை உணர்ந்தேனடி !

 

காலத்தை மறந்து

கானம் பாடி

 

காணும் இடத்தில் எல்லாம்

காதலியின் கவிப்பாடி

 

காத்திருக்கிறேன்

காணவேண்டும் அழகே உன்னை !

 

காவியா > கதிர்

கண்ணில் நிறைந்து

கருத்தில் புகுந்து

 

கன்னி மனதை

களவாடி

 

கள்வனாய் மறைந்தவனுக்கு

கதிர் என்று பெயரோ ?

 

கதிரவனே

கண் திறப்பாய்

 

கன்னியிவளின்  காதல்

கரைந்துபோகும்முன்னே !

 

முகில்மதி > அன்பெழிலன்

அன்பில்

அழகு கொண்டாய் !

 

அழகாய்

அன்பு காட்டினாய் !

 

அருகில் இருந்தபோதிலும்

அகத்தை வாட்டியபோதிலும் !

 

அந்தமில்லாமல்

அன்பு காட்டினாய் !

 

அல்லும் பகலும்

அன்பே உன்னை

 

அகத்தினுள் பூட்டிவைக்கிறேன்

அன்பெழிலனின் பாதியாய் !

 

அன்பெழிலன் > முகில்மதி

முன்னூறு

முன்னிரவுகள்

 

முனிவனைபோல தவமிருந்து

முல்லையாய் சிரிக்கும்

 

முன்பனியாய் குளிரும்

முறுவலில் உள்ளம்கிள்ளும்

 

முகிலவனின்

முத்தான மகளை

 

முறையுடன் மணந்து

முத்தமிட ஆசையடி !

 


 

விட்டு போய்விடுவாயோ  என்ற அச்சத்திலும்

எட்டி பிடிப்பாய் என்ற நம்பிக்கையிலும்

 

கண்ணுக்குள் காப்பாய் என்ற எதிர்பார்ப்பிலும் 

காணாமல் போவாயோ  என்ற தவிப்பிலும்

 

தோழி என்று நிறுத்தி வைப்பாய் என்ற பதட்டத்திலும்

தோள்  சேர்த்து அணைத்து கொள்வாய் என்ற ஆசையிலும்

 

கைக்குள் எட்டாமல் செல்வாயோ என்ற சோகத்திலும்

கைக்குள்ளேயே வைத்து கொள்வாயோ என்ற மோகத்திலும்

 

அருகில் இல்லாமல் ஓடிடுவாயோ என்ற துயரத்திலும்

அணுஅணுவாய் காதலிப்பாயோ  என்ற துடிப்பிலும்

 

சேர்த்து வைத்தேனடா காதலை !

 

சூரியன் போல தகிக்கின்றாய் ஒருகணம்

நிலவு போல குளிரின்றாய் மறுகணம்

யார் நீ ?

 

சூறாவளியாய் சுழற்றுகின்றாய் ஒருகணம்

தென்றலாய் வருகிறாய் மறுகணம்

யார் நீ ?

 

வறட்சியில்  வாட்டுகிறாய் ஒருகணம்

மழையாய் நனைக்கின்றாய் மறுகணம்

யார் நீ ?

 

இரவாய் மோகம் தருகிறாய் ஒருகணம்

பகலாய் நம்பிக்கை தருகிறாய் மறுகணம்

யார் நீ ?

 

இருளாய் பயம் தருகிறாய்  ஒருகணம்

இசையாய்  இதம் தருகிறாய் ஒரு கணம்

யார் நீ ?

 

யாரோபோல ஒதுங்கி நிற்கிறாய் ஒருகணம்

எனக்குள் புகுந்து என்னை சுமக்கிறாய் மறுகணம்

யார் நீ  ?

 

என்னவனே ,

அன்பில் விருட்சத்தில் வேராய்  நீ

ஆத்திரத்தில் கொதிக்கும் சூரியனும் நீ 

 

இனிமையில், இசைக்கு இணையானவன் நீ

ஈரத்தில் இரக்கத்தின் மறு உருவம் நீ

 

உள்ளத்தில் கள்ளமில்லா பிள்ளை நீ

ஊமையால் என்னுள் பாடும் ராகம்

 

என்றும் எனக்குமட்டும் சொந்தமானவன் நீ

ஏக்கம் தருவதில் காதல் மன்னன் நீ

 

ஐயம் தீர்ப்பதில் ஐம்படை வீரனும் நீ

 

ஒன்றொரு ஒன்றாய் இணைத்த ஓருயிர் நீ

ஓசை இல்லாமல் என்னை வென்ற கள்வன் நீ

 

ஔடதமாய்  காதல் நோய் தீர்ப்பவன் நீ

 

உயிரின் உயிரே ,

 

" இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?" என

கண்ணீர் வடித்தேன்

 

கண்ணீர்த்துளிகளுக்கும் முத்தம் தந்து

" நானும் நீயும் வேறு வேறா ?" என்று கேள்வி கேட்டாய்

 

எத்தனை முறை சோகத்தில் விழுந்தாலும்

என் காதலை விழாமல் பிடித்த

என் ஜீவனின் புவியீர்ப்பு  ஷக்தியே  நீதானடா !

-திருமதி சங்கமித்ரா ஷக்தி

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.