(Reading time: 1 minute)

இன்பங்கள் மலரட்டும் தோழனே - புவனேஸ்வரி 

happiness

போகும் பாதை தூரம் இல்லை

கைக்கொடு தோழனே

 

உன் தோளில்  இருப்பது பாரம் இல்லை

யோக்கியம் வீரனே

 

கண்களில் மிடுக்கினை சுமந்து

நீ பகைவனை வெல்வாய்

 

உன் இதழில் புன்னகை தேக்கி

சோகத்தை கொல்வாய் 

 

நேற்று நடந்த கற்களில்

புது பாதையை உண்டாக்கு

 

இன்று அதில் வீர நடை போட்டு

வெற்றியைக்  கைப்பற்று

 

புகழ்ந்து பேசி பின்னால் புறம் பேசும்

நண்பன் வேண்டாம்

 

முன்னால் இகழ்ந்து

முதுகில் குத்தாத பகைவனை போற்று

 

அன்பும் கொஞ்சம் வேண்டுமடா

அதை அடிமனதில் விதைத்து வை

 

இறுகிப்போன இதயத்திலும்

இன்பங்கள் மலரட்டும் தோழனே

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.