(Reading time: 2 - 3 minutes)

உனை விரும்பினேன் உயிரே! - புவனேஸ்வரி 

meeting

மீண்டும் நம் பள்ளி

வெள்ளி விழாவாம் இன்று

 

உன் நினைவுகளை சுமந்த கட்டடம்

எனக்குள் உண்டாகும் புதிய உற்சாகம்

 

சிறுமியாய் உன்பின்னே ஓடினேன் அன்று

குமரியாய் உன்னை தேடுகிறேன் நின்று

 

என் தோளில்  கை போட்டு உறவாடியவனே

என் உள்ளத்தில் இன்று ஏன் புது நடுக்கம் ?

 

நீயும் வருவாயா இவளை பார்க்க

காத்திருக்கேன் உன் விழிகளுக்குள் தோற்க

 

ஒருவேளை உனக்கு திருமணம் ஆகியிருந்தால்

மனதிற்குள் இவள் உனை  மணந்தாள் 

என அறிந்து கொள்ளாமல் போய்விடுவாயோ ?

 

அதோ நிமிர்ந்து நிற்கிறது தென்னை மரம்

நாம் இருவருமாய் நட்டு வைத்த பச்சை வைரம்!

 

இதோ சிரிக்கிறது மீன் குளம் அதில் தேடுகிறேன்

எனை பின்னால் இருந்து தள்ளி விட்ட உன்னை !

 

இதோ நமது நூலகம்

நமக்கு பிடித்த இரண்டாம் அகம் !

 

நாம் சேர்ந்து நடனம் ஆடிய மேடை

இன்று திருமண மேடையாய்  மாறினால் பாக்கியம் !

 

மீண்டும் பார்க்கிறேன் மண்ணை

நான் விழுந்ததும் அன்று கைகொடுத்து தூக்கிவிட்டாய் என்னை !

 

உதட்டில் உதித்தது புன்னகையுடன் சிநேகம்

காலம் தந்த மாயத்தில் சிநேகத்துடன் கலந்தது மோகம் !

 

கனவில் மிதந்தப்படி மீண்டும் தவறி விழப்போக எனக்குள் நடுக்கம்

அதற்குள்  இடையில் இரு கரங்களின்  இறுக்கம்!

 

அன்று கண்ட அதே என்னவனின்  விழிகள்

இந்த முறை விழிகளில் காதல் மொழிகள் !

 

எங்கே போனாய் என்னைவிட்டு என்றேன்

மௌனமாய் புன்னகைத்தாய் !

 

கோபத்துடன் எட்டுவைக்க

எனை கட்டி போட்டது உன் பாடல்

 

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.