கவிதை - வாங்க..வாங்க...பட்டம் வாங்க... - தங்கமணி சுவாமினாதன்
ஆண்டுகள் எழுபதுக்கும் மேலாய்..
சுதந்திரக் காற்றைச் சுவாசித்து சுவாசித்து இதுவரை பாரதம் "சுகித்ததா"?
மூச்சுத்திணறியதா?முள்மீது நின்றதா?
முன்னேற்றம் கண்டதா?
வெள்ளையனை வெளியேற்றி விடுதலை கண்டு..
ஆண்ட கட்சியும்,ஆளுகின்ற கட்சியும்..
மாறிமாறி ஆட்சியைபிடித்தாலும்..
ஆட்சி மாறியதே தவிர காட்சிகள்...
மாறவில்லை..
அன்று முதல் இன்று வரை..
அனுதினமும் அவலங்கள்..
அன்றாடம் அரசியலில்..
அரங்கேறும் காட்சிகள்...
புற்றீசல் போல் புதுப்புது கட்சிகள் ...
பலவண்ணக் கொடிகள்..கோஷங்கள்..
கதர்ச்சட்டைகள்,கரைவேட்டிகள்...
காவியுடைகள்..
கடமை..கண்ணியம்..கட்டுப்பாடில்லா
பேச்சுக்கள்...
கோடிகளைக் குவிக்கும் அரசில்வாதிகள்..
அதிகாரிகள்..அல்லக்கைகள்..
பொது ஜனங்கள் நாம்மட்டும்..
பாபப்பட்ட ஜன்மங்களாய் பாரதத்தில்
வாழுகின்றோம்..
நாள்தோறும் நாடகங்கள் நன்றாய்த்தான்
நடக்குதிங்கே.. கோடிகோடியாய்க் கடன்பெற்று..
வங்கிகளை ஏமாற்றும்-- பெரும்புள்ளி
பலர் பற்றித் 'தினம்'செய்தி வருகுதிங்கே..
சிலைகடத்தி அதைவிற்றுப்-- பணம் பார்க்கும் பெருங்கூட்டம்..திருக்கோயில்
சுற்றுதிங்கே..
மலராத மொட்டினையும்-- கசக்கி நுகருகின்ற காமவெறிக் கயவர்கள்..
காதலென்ற போர்வையிலே.. நம்பவைத்துப் பெண்களையே..
பழுதாக்கி உயிர்போக்கும்..
நீசர்கள் அதிகமிங்கே..
லஞ்சம் கொடுத்தால்--தேர்வில்
கூடுதல் மதிப்பெண்..
சாலை போட கமிஷன் காசு..
மணல் அள்ள கமிஷன் காசு..
மயானத்தில் கமிஷன் காசு..
பிறப்பு, இறப்பு,சாதிசான்று..
எது பெறவும் லஞ்சம்தான்.
ஓட்டுக்கு நோட்டு தந்து..
வெற்றிதனை விலைக்கு வாங்கி..
பதவிக்கு வந்த பின்னர்..
பத்துத் தலைமுறைக்கு-- பணம்
சேர்க்கும்... அரசியல் வேசித்தனம்..
அரசுத்துறை அனைத்திலுமே
கையூட்டின் ஆதிக்கம்தான்..
ஜனநாயகம் புனிதம் கெட்டு...
முடைநாற்றம் வீசுதிங்கே..
பணநாயகம்.. விஷப்பாம்பாய்.
படமெடுத்து ஆடுதிங்கே..
ஆண்டுக்கு ஓர்முறை..
சுதந்திரக் கொடியேற்றம்..
சம்பிரதாயச் சடங்காக..
நடந்து முடியுதிங்கே..
அரசியல்வாதிகளின்..
ஆசைப்படி வளைந்தாடும்..
'பாவைபோல்'-- நீதித்துறை
அலங்கோலம் ஆனதிங்கே..
திருந்தா ஜன்மங்களை..
திருத்த இனி யாருண்டு?
பாரதத்தின் வேர்முழுதும்
செல்லரித்துப்போகாமல்..
காப்பாற்ற யாரிங்குண்டு?
பாரதத்தாயவளின் கண்களிலே..
ஆற்றாமையோடு கண்ணீர்...
ஆறாகப் பெருகல் கண்டு..
இரவில் சுதந்திரம்..
கையேந்தி நாம் பெற்றோம்..
ஆனாலும் நமக்கின்னும்..
விடியவேயில்லையென..
இந்தியத்தாய்தனையே..
தம் இன்னுயிராய் நேசிக்கும்..
நம்மைப்போல் சிலரும் உண்டு..
வாருங்கள் தோழிகளே தோழர்களே..
ஊழலற்ற இந்தியாவை..
வளமான பாரதத்தை...
உருவாக்கிக் காட்டிடுவோம்..
வேண்டாத வீணர்களை..
செல்லாக்காசாக்கி..
வீழ்ந்திடவே வைத்திடுவோம்.
(வந்தே மாதரம்..ஜெய்ஹிந்த்)
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
