(Reading time: 2 - 4 minutes)
India Independence

கவிதை - முடிவில்லா வலியிதுவோ? - தங்கமணி சுவாமினாதன்

மனம் தவிக்கிது..நெஞ்சம் பதைக்கிது..

என்ன நடக்குது? நம் ஆன்மிக-

                                            தேசத்திலே..

பெண்மையைப் போற்றும்..

பண்பாடிருந்தது தொன்மைக் காலத்திலே  

மண்ணும் நதியும் மலையும் விண்ணும்

பெண்களின் பெயர்தனிலே..

ஆதி சக்தியும் பெண்ணே..

ஆக்கும் சக்தியும் பெண்ணே..

ஜீவன்களுக்குள் ஜீவனாய் இருந்து..

காக்கும் சக்தியும் பெண்ணே..

நீதிதேவதையும் அவளே..

நிலமகளும் அவளே..

ஆண்களின் வாழ்வை அர்த்தமாக்கி..

மேன்மை தருபவள் அவளே..

இதுபோல் ஆயிரம் உயர்வு சொல்லி..

உயர்த்தி வைத்தார் பெண்டிரை..

காலம் கரையக் கரைய..

ஆன்றோர் வாக்கு வீரியமிழந்து..

மகளிர் மகிமை மதிப்பிழந்து.

பிற்காலச் சுயநல ஆண்களின்..

கோரப்பிடியில் சிக்கிச்சீர்கெட்டு..

சுயத்தையிழந்ததோ மாதர் நிலைமை?

தலைமுறையிடைவெளிகளால்..

பெண்களின் தரம் உயர்ந்ததா?தாழ்ந்ததா?

தற்கால பேசும்பொருளாம்--

                       பெண்சுதந்திரம்..

பேணப்படுதா?பறிக்கப்படுதா?

சுதந்திரம் ஆண்களின்..

இடக்கையால் தருவதுபோல்--

                               தரப்பட்டு..

வலக்கையால் பிடுங்கப்படுகிறது..

படித்துமுடித்தாலும் பணிக்குச்சென்றாலும்

பெண்ணின் வாழ்க்கையென்னவோ..

சமையலறையிலும் சயன அறையிலுமே

அதையும் தாண்டி கொஞ்சம்..

                         வெளியில் வந்தால்..

காமக்கயவர்களின் வக்கிரப்பார்வையிலே

கார்த்திகைமாதத்து நாய்களின்..

                                   குணத்தோடு..

கூடிக்குடித்துவிட்டு கூட்டுக்களவாணிகள்

குழந்தையோ சிறுமியோ மங்கையோ..

                                               கிழவியோ..

 பார்வையில் பட்ட பெண்ணைக்..

                      கூடியே கெடுத்துவிட்டு..

தீயிட்டுக்கொளுத்திவிட்டு திமிறாய்ச்.

                                          செல்கின்ற..

கொடுமைதனை என்ன சொல்ல?..

வக்கிர எண்ணம் கொண்டு..

பெண்களைத்தொடுகின்ற..

ஆண்வர்க்க நாய்களையே..

ஆண்மை நீக்க வேண்டும்..அன்றி..

ஓடவிட்டுச்சுடுதல் வேண்டும்..

அவர்களின் உயிரைப் பறிக்கவேண்டும்..

கடும் சட்டங்கள் ஆக்கவேண்டும்..

அவைப் பின்பற்றப்படுதல் வேண்டும்.

 

(பெண்களை மதிக்கும் அனைத்து ஆண்களுக்கும் எனது அன்பும் வணக்கமும் நன்றியும்) நன்றி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.