(Reading time: 2 - 4 minutes)
India Independence

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கவிதை - ஏசு பிறந்தார்... எங்கள் ஏசு பிறந்தார்.. - தங்கமணி சுவாமினாதன்

கிங்கிணி கிங்கிணி கிணி..

கிணிகிணி எனவரும்..

மாதாகோயில்..மணியோசை..

காற்றில் தவழ்ந்து வத்து..

காதில் விழுகின்ற..

மாதா கூறும் அருளோசை.

ஜாதி பேதமில்லை..

மதங்கள் அவளுக்கில்லை..

ஏற்றத்தாழ்வுமில்லை..

மேரி..

ஆத்தா அவளின் கோயிலிலே..

பாபம் தொலைந்துவிடும்..

துயரம் ஓடிவிடும்..

மாதா அவளின் பார்வையிலே..

கன்னிப் பருவத்திலே..

சின்னக்குடும்பத்திலே..

கள்ளம் ஏதுமின்றி..

வளர்ந்தவளே..

தேவதூதராம் குழந்தை யேசுவை..

பெற்றெடுக்கவே பிறந்தவளே..

கன்னியவளைத்தான்..

காலம் படைத்ததோ..ஓர்..

ஒளியின் கீற்றைத்தான்..அவள்..

உயிரில் கலந்ததோ..

அவள் புனித வயிற்றில்தான்..

ஜீஸஸ்.. உயிரும் வளர்ந்ததே..

கன்னி...

மேரி கருவிலே..

பத்து... மாதம் கழிந்ததே..

உலகரட்சகன் பூமி சேரவே..

காலம் வந்ததே..நல்ல நேரம் பிறந்ததே..

டிசம்பர் திங்களில்..

இருபத்..தைந்தாம் தேதியில்..

பெத்லஹேம் என்கிற புனித பூமியில்..

நள்ளிரவு வேளையில்..

ஆடு மாடுகள் காத்திருக்கவே..

சேவக் கோழிகள் பாத்திருக்கவே..

வாசமலர்கள் பூத்துக்குலுங்கவே..

மங்கல வாத்திய ஒலிகள் முழங்கவே..

வானில் அசரீரி வாழ்த்து கூறவே..

வெண்ணிற அங்கி மேனியில்..

ஒட்டியிருக்கவே..

கஸ்தூரி வாசம் உடலைச்..

சேர்ந்திருக்கவே..

தேவமைந்தன் குழந்தை யேசு..

உலகைக்காக்க ...அவதரித்தாரே..

மாந்தரெல்லாம் மகிழ்ந்திருந்தாரே..

அவதார புருஷன்..

அவதரித்த நாளினை..

கிருஸ்துமஸ்... நாளென.. 

ஏட்டிலன்றே... எழுதி வைத்தாரே.

*ஏசு பிறந்தார் எங்கள் ஏசு பிறந்தார்*..

மனக் கவலைகள் மறைந்ததம்மா..

மீட்பர் பிறந்தார்... உலகை..

மீட்கப் பிறந்தார்..அவரைத்.

தோத்திரம் செய்வோமம்மா.

 

மத பேதமின்றி அனைத்து அன்பர்கட்கும் நெஞ்சார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நன்றி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.