விடாத காய்ச்சல் - தங்கமணி சுவாமினாதன்
எதிர் வீட்டுக் காரருக்குப் பத்து நாளாய்
விடாத காய்ச்சல்..
குருதிச் சோதனையில் குறிப்பிட்டு எதுவுமில்லை..
பன்றிக் காய்ச்சல் இல்லை..
பறவைக் காய்ச்சலில்லை..
குரங்குக் காய்ச்சலுமில்லை..
எபோலாவும் இல்லவே இல்லை..
டெங்குவா இல்ல..இல்ல..
டைபாய்டா,காமாலையா அதுவும் கூட..
இல்லையாம்..
விடாத காய்ச்சலுக்கு வித்தெது தெரியாமல்
விபரம் புரியாமல் விழித்தனர் மருத்துவர்..
மனுஷன் வாயைப் பிடுங்கி விஷயம் அறிந்தபோது..
அவரின் பக்கத்து வீட்டுக்காரர் பி.எம்.டபுள்யூ கார்-
வாங்கியிருக்க..
இவருக்கு "ஜெலசால்" வந்ததாம் விடாத காய்ச்சல்..
சிரிக்கவோ,சிந்திக்கவோ இதில் ஒன்றும் இல்லை..
சீரியசாக எடுக்க வேறெதுவுமில்லை..
பரவாயில்லை..கொஞ்சம் புன்னகையாவது..
செய்யுங்களேன்...