(Reading time: 2 - 3 minutes)

ஜாதகம் ஒரு... - தங்கமணி சுவாமினாதன்

முகம் பார்க்கும் கண்ணாடியை-நான்

மூன்று மாதங்களாகப் பார்ப்பதேயில்லை...

கடைசியாய்ப் பார்த்தபோது...

காதுகளின் ஓரங்களில் வெள்ளை முடிகள்..

 

அடிப்பெண்ணே உனக்கு வயதாகிவிட்டது

எனச் சொல்லாமல் சொல்கிறதோ?..

முப்பதோடு ஒரு ஐந்தும் சேர்த்தால் வரும்..

வயதெனக்கு...

நான் முதிர்கன்னியா?பேரிளம் பெண்ணா?

எப்படிச்சொல்வது..தெரியவில்லையெனக்கு..

 

என் இருபதுகளில் நானும் அவ்வயதுக்கான

கனவுகளோடு....

செல்லுலாயிட் நாயகர்களுடன்..பாட்டுப்பாடி

தோழியருடன் மகிழ்ந்து கொண்டாடி...

 

பள்ளி இறுதியோடு படிப்பு சரி...

பாசத்தைக்கொட்டும் பணமில்லா பெற்றோர்..

இருப்பதைக் கொண்டு வரம் பார்க்க முயல..

ஜாதகம் எடுத்து ஜோதிடர் பார்க்க..

பேரிடியொன்று என் பெற்றோர் தலையில்..

எனக்கு லக்னத்தில் ராகுவாம் ஏழில் கேதுவாம்..

இரண்டிற்கிடையே மற்ற கிரகங்களாம்..

இது போதாதென்று இரெண்டில் செவ்வாயாம்..

எனவே எனக்கு சர்ப்ப தோஷமாம்.செவ்வாய்-

தோஷமாம் மாங்கல்ய தோஷமும் கொசுறாய்

உள்ளதாம்..

 

பொருத்தமான ஜாதகம் பொருந்தி வரும் போதுதான்

உங்கள் பெண்ணுக்குத் திருமணம் ஜோதிடர் சொல்லிட

தேடித்தேடி தந்தையும் செருப்புத்தேய நடந்திட..

கூடிவராக் கவலையில் நாலு சட்ட அட்டையில்-

என் தாயும் ஏறி நின்றிட..

நடை பிணமாய் தந்தையும்...

நரைத்த முடியோடு நானும்...

என்ன ஜாதகமோ?...என்ன தோஷமோ?..

கம்ப்யூட்டர் யுகத்திலும்..கற்காலச் சிந்தனை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.