(Reading time: 2 - 4 minutes)

கவிதை - கிங்கிணி..கிங்கிணி கிணி..கிணி..கிணியென வரும்.. - தங்கமணி சுவாமினாதன்

christmas

ஜெருசலத்தில் பெத்லஹேம்..

அந்த நள்ளிரவில் புனிதம் அடைய..

தவம் செய்து காத்திருந்ததோ..?

வானத்தில் விண் மீன்கள்..

வாரி இறைத்தது போல்..

வைரக் கற்களாய் மின்னிச் சிரித்திட..

தென்றலும் இதமாய் தோத்திரம் பாடிட..

பூக்களும் வாசத்தை காற்றோடு அனுப்பிட..

அந்தச் சின்னஞ்சிறு தொழுவத்தில்..

மாடுகளும்--கன்றுகளும்...

ஆடுகளும்-- குட்டிகளும்..

கழுத்து மணி ஒலியெழுப்பி..

ஆனந்தக் குரலெழுப்பி..

அவன் வரவைக் காண்பதற்கே..

ஆசையோடு நிற்கையிலே..

வைக்கோல் படுக்கையிலே..

கன்னியவள் திருவயிற்றில்..

துயின்ற அப்பாலகன்தான்..

காசினியை ரட்சிக்க..

கடவுள்போல் பிறந்திட்டான்.

தேவ தூதன் பிறந்ததாக..

வானத்தில் அசரீரி.. யாவர்க்கும்..

அறிவிக்க..

அங்கம் மீதினிலே ஓர்..

அங்கியோடு பிறந்திட்ட அற்புதக்..

குழந்தையவன்..ஏசு எனும் பேர்கொண்ட..

ஞானக் குழந்தையவன்..

ஞாலத்தில் உயிர்களெல்லாம்..

சீலத்தோடு வாழ்ந்திடவே..

பாசத்தோடு பற்பல நியாயத்தைச்..

சொல்லியவன்..நம் பாவத்தின் சம்பளமாய்..

முள் முடியைத் தலை மீதும்..

கனக்கும் சிலுவைதனைத் தன் தோள் மீதும்..

சுமந்து நின்று...உதிரத்தை உரமாக்கி 

சத்தியத்தைக் காப்பாற்றி சரித்திரமாய்

வாழ்ந்திட்டான்..தெய்வமாய் மறைந்திட்டான்..

ஆண்டவனாய் இருந்து நம்மை அனுதினமும்

காக்குமந்த யேசுவின் திருச் சபையை..

தட்டுங்கள் திறக்கப்படும்..மனம் நெகிழ கேளுங்கள்.

கொடுக்கப்படும்..

வாருங்கள்..வாருங்கள் உலகத்து அனைத்து..

ஜீவன்களே வாருங்கள்...

ஏசு பிறந்த இந்த இனிய நன்னாளிலே..

அவனைப் பாடித் துதித்திடுவோம்..

பாபங்கள் போக்கிடுவோம்..

நேசம் வளர்த்திடுவோம்..

ஒன்றாய்ச் சேர்ந்து உலகிற்கு..

"ஹேப்பி கிருஸ்த்மஸ்..சொல்லிடுவோம்"

 

 அன்பு  கிருஸ்தவ அன்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த இனிய "கிருஸ்த்மஸ்" வாழ்த்துக்கள். நன்றி...

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.