அவளும் இவளும் - அமீர்

அவள்
நான் பார்த்த முதல் அழகி!
இவள்
என்னைப் பார்த்த பேரழகி!
அவள்
என் உயிர் காக்கும் தோழி!
இவள்
எனக்காக உயிர் கொடுக்கும் தோழி!
அவள்
என் வாழ்க்கைக்கு வெளிச்சம்தந்த முழுநிலவு!
இவள்
வாழ்க்கையை வண்ணமாக்கிய வானவில்!
அவள்
என்னுள் கலந்திருக்கும் மூச்சுக்காற்று!
இவள்
எனக்காகவே மூச்சுவிடும் தென்றல் காற்று!
அவள்
எனக்கு மட்டுமான குறிஞ்சிமலர்!
இவள்
எனக்காகவே அமைந்த பூங்காவனம்!
அவள்
என்னைப்பாடும் தாலாட்டு!
இவள்
நான் பாடும் கவிதை!
அவள்
என் நோய் தீர்க்கும் மருந்து!
இவள்
எனக்கான தலைவாழை விருந்து!
அவள்
என்னுள் வாழும் மனசாட்சி!
இவள்
நான் ஆளும் அரசாட்சி!
அவள்
என் கவுரவத்தின் சிம்மாசனம்!
இவள்
நான் தலையில் சூடும் மணிமகுடம்!
அவள்
எனக்கு ராஜ்ஜியம் தந்த மகராணி!
இவள்
ஆட்சியை தந்த பட்டத்து ராணி!
அவள்
அன்பின் இலக்கணம்!
இவள்
பன்பின் சிகரம்!
அவள்
நிறந்து விளங்கும் முப்பால்!
இவள்
நான் குடிக்கும் தீம்பால்!
அவள்
கோடையில் வரும் மழை!
இவள்
குளிறில் கிடைக்கும் கதகதப்பு!
அவள்
என் தவறுகளை பொறுக்கும் திருமகள்!
இவள்
என் தவறுகளை தடுக்கும் தெய்வமகள்!
அவள்
என்னை பெற்றடுத்த தாய்!
இவள்
என் காதலியாய் வந்த தாரம்.!
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.