வாழ்க்கை மிகவும் அழகானது - கவிதாசன்
கிணற்றிலே அருகம்புல், பிடுங்கி சென்றது அக்குருவி
கல்லூரியில் படிக்காமல் கற்றுத்தேர்ந்தது கட்டடக்கலை;
சிறுகிளையில் பின்னல் தொடங்கி, அடிவயிற்றில்
அழகான பொந்து வைத்த புள் கூண்டு..
ஒரு செடியில் எத்தனை வீடு, சண்டையே இங்கில்லை..
நிலம் அதற்கு சொந்தம் இல்லை, பட்டாவும் போடவில்லை.
பட்டா போட்ட நிலம் இருந்தும் அடித்து கொள்ளும் மனிதஇனம்.
வாழ்க்கை மிகவும் அழகானது...
இரு பறவை உள்ளே செல்ல, ஆண் பெண் என்று யூகித்தேன்.
சிலநாளில் உண்மை என்றேன் முட்டைகளை காணும்போது.
உணவுக்கு வந்துவிட்டது சாறை பாம்பு ஒன்று..
பறந்தது விட்டது குருவிகள்; முட்டைகள் தப்பித்து கொண்டது..
வேறு இடம் சென்றிருக்கும், நினைப்பிலேயே சென்றேன்.
மூட்டைப்பூச்சிகா வீட்டை எரிப்பேன், கூட்டினிலே பறவைகள்.
சாறை பாம்பா, நாகப்பாம்போ; என் வாழ்க்கை இங்கே..
வாழ்க்கை மிகவும் அழகானது...
சிறு பறவை என்று நினைத்தேன்;
பெரும் பாடம் கற்று கொண்டேன்
கிளைமுறிந்து போனாலும், நாகம் வந்தாலும்
கூடுகட்ட துணிவுண்டு, வாழ்வதற்கு இடமுண்டு
வாழ்க்கை மிகவும் அழகானது...
{kunena_discuss:779}