(Reading time: 2 - 3 minutes)

மலருக்கு பரிசு  - கவிதாசன்

flower

பிறக்கையில் முகத்தின் சிவப்பை கண்டு செந்தாமரை என்று பெயர் வைத்திருக்கலாம்;

விரல்களின் அசைவை கண்டு கலையரசி என்று பெயர் வைத்திருக்கலாம்;

மெல்லிய பாதம் உதைக்க மகிந்து மலர் என்று பெயர் வைத்திருக்கலாம்;

மீன் போல் உள்ள கண்களை கண்டு கயல்விழி என்று பெயர் வைத்திருக்கலாம்;

ஜொலிக்கும் கன்னங்கள் கண்டு சொர்ணம் என்று பெயர் வைத்திருக்கலாம்;

சிரிக்கையில் சிந்தும் முத்துக்கள் கண்டு லக்ஷ்மி என்று பெயர் வைத்திருக்கலாம்;

அழுகும் இனிய ஓசை கேட்டு குயில் என்று பெயர் வைத்திருக்கலாம்;

காற்றைநடனமாடும் உன் கைகளின் அசைவை கண்டு அபிநயா என்று பெயர் வைத்திருக்கலாம்;

உன்பட்டான தலை முடி கண்டு மயில் என்று பெயர் வைத்திருக்கலாம்;

ஆனால் உன் பெயர் இது எதுவும் இல்லை...

 

ஏனடி, நீ தாளில் எழுதினாய்??

வர்ணங்கள் பல பூசினாய்??

வார்த்தைகள் பல கோர்த்தாய்??

வாய்திறந்து பாடினாய்??

இவை தான் காரணமோ என்று நான் அறியேன்.....

 

 

பாடல்கள் இயற்றுவாயோ??

கவிஞர்களில் மேன்மைபடுவாயோ??

பல கவிதைகள் படைப்பாயோ??

என் மனதில் குடி கொள்வாயோ???

இவை தான் காரணமோ என்று நான் அறியேன்.....

 

கவி உன்வசம் இருக்க 

பெயர் சிறந்து செழிக்க 

ஊரார் செப்பி மகிழ 

நானும் கண்டேன் உன்னை...

 

கண்ட நாள் என்றோ...!!!

அந்த நாள் இன்றோ....!!!

மலரும் நினைவு சிறிதோ...!!!

இன்று உனக்கு இது பரிசோ...!!!

 

கவியோடு சேர்ந்துவிட்டேன்;

கவிதாசன் ஆகிவிட்டேன்;

உன்புகழ் பாடிவந்தேன்;

தொலைவில் இருந்தும் உன்னை தீண்டிவிட்டேன்

இதழோடு கவிதா கவிதா என்று...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.