(Reading time: 1 minute)

தமிழ் காதல் - தமிழ் தென்றல்

Love

வல்லினமாய் உன் பார்வை

மெல்லினமாய் உன் தீண்டல்

இடையினமாய் உன் பேச்சு

நெடிலாய் என்னுள் நெட்டிய அச்சம்

குறிலாய் எழுந்த நாணம்

குற்றியலுகரமாய் என்னை குறுக்க

அளபெடையாய் எழுந்த ஆசை

முற்றியலுகரமாய் நெஞ்சை முட்ட

ஐகாரக்குறுக்கமாய் ஐயம் குன்ற

ஆய்தமாய் தனிநிலையில்

மெய்யாக நானிருக்க

உயிராக நீயிருக்க

உயிர்மெய்யாய் நாமானதுதான்

காதல்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.