(Reading time: 1 - 2 minutes)

26. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

புதிராய் பெண்!  விடையாய் காதல்!

அழகு தீயாய் பெண்!  தென்றல் காற்றாய் காதல்!

பனி சிலையாய் பெண்!  கதிர் ஒலியாய் காதல்!

திங்கள் குளியாய் பெண்!  ஆசை புழுக்கமாய் காதல்!

கலையா மேகமாய் பெண்!  கனவில் குரலாய் காதல்!

பேசும் கவிதையாய் பெண்!  எழுதா காவியமாய் காதல்!

அசையும் ஓவியமாய் பெண்!  அடர்ந்த இருளாய் காதல்!

மெல்லிசையாய் பெண்!  பேய்மழையாய் காதல்!

ஓடாத நதியாய் பெண்!  ஓயாத அலையாய் காதல்!

சிப்பிக்குள் முத்தாய் பெண்!  அக்கினி பிழம்பாய் காதல்!

ஆழ்கடலின் அமைதியாய் பெண்!  குதிக்கும் அருவியாய் காதல்!

சினுங்காத கொலுசாய் பெண்!  சத்தமிடும் சலங்கையாய் காதல்!

சந்தோஷ சாரலாய் பெண்!  கண்ணீர் துளியாய் காதல்!

காதல்தேவதை பெண்!  கொல்லும் கவலை காதல்!

இதழில் புன்னகையாய் பெண்!  இதயத்தில் வலியாய் காதல்!

தூங்காத நினைவாய் பெண்!  தூக்கத்து உளரலாய் காதல்!

வாச மலராய் பெண்!  வசிய மந்திரம் காதல்!

எட்டாத கனியாய் பெண்!  ஏகாந்த ஏக்கமாய் காதல்!

மந்திர புன்னகை பெண்!  மாலை மயக்கமாய் காதல்!

அனையாத தீயாய் காதல்!  அனைக்காத தீயாய் பெண்!

Poem # 25

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.