(Reading time: 1 - 2 minutes)

புகை - முஹம்மது அபூதாஹிர் Smoking

உன்னை பிறர்

எதிர்த்தால் அது பகை!

உன்னையே நீ

எதிர்த்தால் அது புகை!

 

புகைக்க, புகைக்க

வாழ்வு உன்னை பகைக்கிறது !

புகை உள்ளே இழுக்க இழுக்க

இறப்பு சீக்கிரமாய் உன்னை அழைக்கிறது!

 

புத்துணர்வுக்கு புகைக்கப் போய்

புற்றுநோய்த்தான் வந்தது !

மன நிம்மதிக்குப் புகைக்க போய்

மாரடைப்புத்தான் வந்தது !

 

ஒட்டு பீடி பழக்கம்தான்

கட்டு பீடியாய் மாறியது!

தெரியாமல் ஆரம்பித்த பழக்கம்

வழக்கமாய் மாறியது !

 

இழவு புகைத்தவனுக்கு

வாழ்வு விற்றவனுக்கு !

 

அரிவாளுடன்

அவனுடைய எதிரில் இருப்பவனிடம் போன போது

சீக்கிரமாய் அவன் அகன்றான் !

அவனருகில் போய்

சிகரெட்டுகளை புகைத்த போது

அவன் இறந்தான்!

 

ஆற்றின் ஆழப்பகுதி ஆபத்து என

அறிவிப்பு பலகை பார்த்தால்

அவ்விடம் விட்டு அகல்கிறார்கள்!

சிகரெட்டின் அட்டைப் பகுதியில்

புகைத்தல் உடலுக்கு கேடு என

அதை படித்த பின்தான் புகைக்கிறார்கள்!

  

நண்பா !

கவலை மறக்க புகைக்கிறாய்!

பசியால் மக்கள் படும் அல்லல் நினைத்து

கவலைப்படு!

எவ்வளவு  சிகரெட்டுகளை புகைக்கிறாய்?ஏழை மக்களுக்கு

அந்த காசை கொடு !

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.