(Reading time: 2 - 3 minutes)

வாலிபத்தின் வாசல் - சிவரஞ்சனி 

 teens

அணு ஆற்றலைப் போன்றது
வாலிபத்தின் வாசல்,
அதனைப் பிரயோகிப்பவனைப் பொருத்தது 
சொர்க்கமும் நரகமும்!

அறிவிழந்த அமெரிக்கா ஒரு
நரகத்தை உருவாக்கியது,
அறிவில் கூர்ந்த இந்தியா ஒரு
சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது!

நீங்கள் அறிவாளியாகப் போகிறீரா?
இல்லை அறிவீனராகப் போகிறீரா?

வாலிபத்தின் வாசலில்,
அதன் ஆற்றல் கொண்டு,
வாழ்வில் உயர்ந்து,
இவ்வலகிலேயே
சொர்க்கத்தைக் காண்பீர்களானால்
நீங்கள் அறிவாளிகள்!

ஆனால் அதனை
போதைக்கும்,பேதை(மை)க்கும்,
புகைக்கும், திரையரங்கு என்ற
மாயக் குகைக்கும்,
உங்களை நீங்களே தொலைத்துவிட்டுத் தேடச் செய்யும் தொலைக்காட்சி மற்றும் கைபேசிக்கும்,வலை விரிக்கும் ஒரு சில வலைதளங்களிலும் 
வீணடித்தீர்களானால்
நீங்கள் அறிவீனர்கள்!

இனப் பிரச்சினையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்ட ஆற்றலை இழிவான இனக் கவர்ச்சியில் பொசுக்காதீர்!

வாலிபத்தின் வாசல்
உங்களை மன்னர்களாகவும் ஆக்கும்!
மண்ணர்களாக்கியும் அழிக்கும்!

வாலிபத்தின் வாசலில்,
தடைக்கற்களால் தகர்த்தெரியப்பட்டு,தடம் தெரியாமல் போகலாம்!

அதனைப் படிக்கற்களாக்கி
பனிச் சிற்பம் போல் 
பொலிவு பெறலாம்!

அது உங்களை அழித்து விட அனுமதிக்காமல்,
நீங்கள் அதனைக் கொண்டே வெற்றி பெறங்கள்!

இளைஞர்களே!
வாலிபத்தின் வாசலில்
தடம் புரளாமல்,உங்கள் தடத்தை இவ்வுலகில் பதித்து,
இனிய வாழ்வைப் பெறுங்கள்!

உங்களைக் குனிய வைத்துக் குட்டும் இவ்வுலகினை
உங்கள் காலடியில் பணிய வைக்கலாம்!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.