(Reading time: 1 - 2 minutes)

கவிதை எழுதும் கவிதை - சிவரஞ்சனி 

Write

அழகே!
நீ வடித்த வரிகளை விட,அதை நான் படித்தேயாக வேண்டும் என்ற உன் 
அடவாதம் அழகாக இருக்கிறது!

உனது சின்னஞ்சிறு பிள்ளை போன்ற செல்லச் சிணுங்கல்களும்,
சிந்தனையை சிறகடிக்கச் செய்து
சிப்பிக்குள் முத்தாய், நீ எடுக்கும் 
சிறந்த முதிர்ந்த முடிவுகளும்
என் வாழ்வினையே 
கவிதை ஆக்குகின்றன!

என்னவளே!
உன் அன்பே எனக்கு 
அப்துல்ரஹ்மானின் கவிதைகள்!
உன் அறிவே எனக்கு
அறிவுமதியின் கவிதைகள்!
உன் பண்பே எனக்கு
பாரதியார் கவிதைகள்!
உன் பணிவே எனக்கு
பாரதிதாசன் கவிதைகள்! 
உன் கனிவே எனக்கு
கண்ணதாசனின் கவிதைகள்!
உன் காதலே எனக்கு
கவிப்பேரரசின் கவிதைகள்!
உன் களிப்பே எனக்கு
கம்பனின் கவிதைகள்!

இனியவளே!
நீ எனக்கு அளித்த ஸ்வாரஸ்யத்தை விட,
ஷேக்ஸ்பியரின் 
நயமான நாடகங்களும்,
ஷெல்லியின் 
வல்லிய வரிகளும்
உனக்கு ஸ்வாரஸ்யம் அளித்திருக்கும் என்று 
எனக்குத் தோன்றவில்லை!

அந்தக் கவிதைகளுக்கெல்லாம்
முடிவுண்டு!
ஆனால் நான் படிக்கும் கவிதைக்கு முடிவேது!

ஆம்!
நான் படித்த,படிக்கின்ற,படிக்கப் போகின்ற மிகச் சிறந்த 
கவிதை நீதான் கண்ணே!

ஆனாலும் அன்பே,
அதனைப் படித்து முடிக்க,
இந்த ஒரு ஜென்மம் போதாதென்றே எண்ணுகிறேன்!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.