(Reading time: 2 - 3 minutes)

கவிதை - அவளும் தமிழும் தமிழும் அவனும் - ஷக்தீ

Tamil

தாயை விட தாய்மொழி நேசிப்பவள் அவள்

தமிழா நானா என தர்க்கம் புரிபவன் அவன்

 

 அவள் மொழிந்தால் அது இல்பொருள் உவமை அணியாம்

 அதுவே அவன் மொழியால் உயர்வுநவிற்சி அணியாம்

 

அசை சீர் தளை என கலந்துகட்டி

யாப்பு யுத்த களேபரம் செய்வாள் அவள்

அசைவின்றி அவள் கர்வ கண்களை

மொழிபெயர்த்து கண் சிமிட்டுவான் அவன்

 

கவி சிலேடை கூட இரு பொருள்தான் தரும்

கவியவன் சிலேடை பலருக்கு பொருள் தரும் 

 

கன்னியான நாட்களில் கல்ஆடாமல்

கல்கியுடன் கரைந்தவள் அவள்

கண்டறியாமல் கதை தெரியாமல்

குளம்பியென கற்பிப்பான் அவன்

 

அவன் வாழ்வில் அவள் இறந்தகால வினைமுற்று

அவள் வாழ்வில் அவன் வினைத்தொகை

 

தமிழும் திங்களும் ரசிக்கா கவிதை இல்லை

தமிழும் திங்களும் ரசிக்கா கவிஞனும் இல்லை

 

தமிழும் கவியும் பழகியது பல காலங்கள்

தமிழ்க்கயவன் பழகியதோ சில காலங்கள்தான்

தமிழ்க்கலை ஓர் இரவில் கைவரப்பெறுவதில்லை

 

கம்பனின் சீதை இல்லை நீ என்றான் அவன்

கண்ணன்பாட்டு ராதையும் இல்லை என்றாள் அவள்

 

தமிழ்மொழியால் தொடங்கிய உரை

தன் மொழியின்றி மௌனத்தில் மனதில்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.