கவிதை - நான் ஒரு பெண் - வின்னி
நான் அழகானவள் அல்ல
என் உடலும் ஒரு மாடலுக்குரிய உடலும் அல்ல
ஆனால், என் நடை, உடை, பாவனை எல்லாம்,
அழகான பெண்களையே ஆச்சரியப்பட வைக்கிறது
என் அழகின் மர்மம் எங்கே மறைந்திருக்கிறது?
எனது கைகள் அழகானவை அல்ல
ஆனால், அவை வாழ்க்கையில் மற்றவர்களைக்
கைபிடித்து தூக்கிவிடுவதில் முன்நிற்பவை
எனது கால்கள் கவர்ச்சியானவை அல்ல
ஆனால், நான் வாழ்க்கையில் எடுத்து வைக்கும்
திடமான ஒவ்வொரு அடிகளையும்
வெற்றிகளையும் அவை பிரதிபலிக்கின்றன
எனது உதடுகள் கவர்ச்சியானவை அல்ல
ஆனால்,என் உதடுகளிலிருந்து வருபவை
ஆறுதல்தரும் அழகான வார்த்தைகள்
ஆமாம், நான் ஒரு பெண்
நான் அந்த மண்டபத்துள் நுழையும் போது
என் வலிமையான பேச்சைக் கேட்க
என்னை உற்றுப் பார்க்கும் அந்தக் கண்கள்,
அவர்களை ஊக்குவிக்கும் என் சொற்பொலிவைக் கேட்க
ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அவர்கள்
என்னிடம் கண்டது என்ன?
முகத்தில் தெரியும் என் அகத்தின் அழகா?
என்னைத் தேனீக்கள்போல் சுற்றிவரும்
ஆண்கள் என்னிடம் விரும்புவது என்ன?
என் மூளையில் மறைந்திருக்கும் அந்தஅறிவா?
என் கண்களில் சுடர்விடும் சுடரொளியா?
என் பேச்சில் தெரியும் ஆழமான கருத்தா?
அவர்கள் என்னிடம் காண்பது
என் பளிச்சிடும் பற்களை அல்ல
அதிலிருந்து வரும் கனிவான புன்னகையை
அவர்கள் விரும்புவது,
அவர்கள் சொல்வதைப். பொறுமையாகக் கேட்டு
அவர்கள் உணர்வுகளை வெளிக் கொண்டு வந்து,
அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி
அவர்கள் கவலைகளை மறக்கச் செய்யும் எனது ஆற்றல்
என்னிடம் எதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது
ஆண்கள் அதிசயிக்கிறார்கள்,
அழகான பெண்கள் வியப்புடன் உற்றுப் பார்க்கிரார்கள்
அவர்களால் என்னைத் தொட முடியவில்லை
ஒரு மரியாதை கலந்த பயமோ?
புற அழகைத் தேடும் பலருக்கு
எனது அக அழகு புரியவில்லை
அவர்கள் தேடுவது
வில்வளைவுள்ள உடலை
மெல்லிய இடையை
மார்புகளின் அசைவுகளை
சிவத்த மேனியை
நீண்ட கூந்தலை
கவர்ச்சியான உடலை
காமப் பார்வையை
நான் அந்தப் பெண் அல்ல
நான் தலை குனிவதில்லை,
உரக்கக் கத்துவதில்லை,
ஆத்திரத்தில் துள்ளிக் குதிப்பதில்லை,
ஏன், சத்தமாகக் கூட பேசுவதில்லை
கவர்ச்சியாக்க என்னை அலங்கரிப்பதில்லை
நான் ஒரு அதிசயப் பெண்
நான் ஒரு ஆணைக் கடந்து போகும்போது
அது அவனைப் பெருமைப் படுத்தும்
அது அவனை அரவணைக்கும்
என் புன்னகையில் தெரியும் கனிவு
அவன் உள்ளத்தை நெகிழவைக்கும்
நான் ஒரு பெண்
பி.கு: “ வாழ்க்கை உன்னை எப்படி உருவாக்குவது என்பது பற்றியது அல்ல ;நீ எப்படி என்று கண்டுபிடிப்பது பற்றியது”
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
