(Reading time: 1 - 2 minutes)

முத்தம் - வின்னி

Kiss

நான் உன் கண்களுக்குள் பார்க்கும்போது

  உன் உணர்வுகள் என்ன என்று

அறிய ஆவலாக இருக்கிறேன்

 

நான் உன் முகத்தை வருடி

உன்னோடு நெருங்கும்போது

நீ எப்படி என்னை உணருகிறாய் என்று

அறிய ஆவலாக இருக்கிறேன்

 

நான் முத்தமிடமுன்  உன் உதடுகளை

இரசித்துப் பார்க்கும் போது    

நீ எப்படி என்னை உணருகிறாய் என்று

அறிய ஆவலாக இருகிறேன்

 

நான் உன்னை முத்தமிடும் போது

நீ எப்படி என்னை உணருகிறாய் என்று

அறிய ஆவலாக இருகிறேன்

 

எனது முத்தம் உன்னை என்ன செய்கிறது

அதன் பிரதிபலிப்பை உன் உணர்வுகள் மூலம்  

அறிய ஆவலாக இருக்கிறேன்

 

நான் உனது உதடுகளைச் சுவைக்க  

அதன் மென்மையை உணர

ஆவலாக இருக்கிறேன் 

 

எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை முத்தமிடு

அது மென்மையான நீண்டதாகவோ

அல்லது கடினமான வேகமானதாகவோ இருக்கலாம்

எனக்கு முத்தமிட்டுப் பார்

 

அது எங்கு உன்னை அழைத்துச் செல்கிறது என்று

உன் முத்தத்தின் மூலம் என்னை உணர வை

உனக்கு வேண்டியபோது எப்போதும்

எனக்கு முத்தமிடு  

 

உனது காதலின் வலிமையை அறிய

எனது காதலை உன்னிடம் உணர்த்த

உனது உணர்வுகளை  அறிய

எனக்கு வேறு வழி தெரியவில்லை  

முத்தத்தின் சக்தியைத் தவிர

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.