(Reading time: 2 - 3 minutes)

மாசுபட்ட எதிர்காலத்தை மாற்றிடுவோம் - வின்னி

Kamloops
Picture by author – Beautiful Kamloops BC Canada

நமது எதிர்காலம் மாசுபட்டது

நீல வானம் மங்கலாகத் தெரிகிறது

ஒளி வீசிய நட்சத்திரங்கள் இப்போது

மாசுபட்ட புகை மண்டலத்தால் மங்கிவிட்டன

 

நீந்தி விளையாடிய,

 மீன்கள்

பளிங்குக் கற்கள் போலத்  

தெளிவாகப் பளிச்சிட்ட

எமது தண்ணீர்

கடலின் அடியில் பரந்திருக்கும் வெள்ளை வெளேரென்ற  

மணல் தரைகள்

இப்போது குப்பை கூளங்களால்

அசுத்தப்பட்டு, மாசுபட்டு, மங்கலாகி,

கபில நிறமாக மாறி விட்டன           

 

வான் உயர்ந்த மரங்களும்,

அசையும் கிளைகளும்,

அவற்றில் அமர்ந்து   

இனிய குரலில் இசைபாடும் பறவைகளும்,

சுத்தமான காற்றில் கலந்த கரியமில வாயுவினால்,

 உயிரைக் பிடித்தபடிதட்டுத் தடுமாறி

முடிவில் உயிரிழக்கின்றன

 

பச்சைப் பசேலென்ற  புல் தரைகள்

கல்தரைகளாக மாறி

அபிவிருத்தி என்ற பெயரால்

சிறிது சிறிதாக  அழிகின்றன

சாக்கடைத் தண்ணீர் எல்லாம்

குடிநீரில் கலக்கின்றன  

 

காலநிலைதான் காரணம் என்று கூறி

நம்மை நாமே ஏமாற்றாமல்  

காலநிலையின்  மாற்றத்துக்கு  

நாமே காரணம்  என்றுணர்ந்து  

 

‘வினை  விதைத்தவன்  வினை  அறுப்பான் ,

தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான்’

என்ற சொல்லின் படி

 

பழைய வேரைக் களைந்து ,

நல்ல விதையைப் பரப்பி, 

 சுற்றாடலைப் பேணி

நமது வருங்கால சந்ததியை 

ஆரோக்கியமாக வாழ வைப்போம்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.