(Reading time: 1 - 2 minutes)

கறுப்புநிற என் கண்ணன் - தீபாஸ்

Dark is beautiful

வாடியமலறாய் வந்தமந்தான் மடியில் .

வருந்தாதே என் மலரே வதங்ககாரணம் என்றேன்

 

முடிகோதியகையைமுறைத்துப் பார்த்த மலரோ

முகம்சுளித்து கேட்டான், உன்னைப்போல் ஏன் நானில்லை?,

 

கண்ணனை கண்டதுபோல் களிப்புடன் சொன்னேன் ,என்

கண்ணே நீ உன் அப்பாவின் கம்பீர பிரதிபலிப்பு என்றேன்.

 

மலர்ந்தது மகனின் முகம் என்மண்ணவனே என்

மகனின் ஹீரோ ,மலரது மகிழ்ச்சிமறைந்தது மறுபடியும்

 

கறுப்பானால் அழகில்லை என்றான் அழுகையுடன்

கம்பீரமேகருப்புதான் கண்ணா கலங்காதே என்றேன்

அழகென்பது அகம் என்றேன் அதில்லைஎன்பவனை

அருகில் சேர்க்காதே , அருகிலிருந்தாலும் நீ மனதால்

வாழ்ந்துகாட்டு கலியுக கதிரவனாய் உலகில்மின்னி

வாழ்க தமிழனின் கம்பீர கார்வண்ணனாய்.

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.