(Reading time: 2 - 4 minutes)

கவிதை - தமிழினமே வென்றுவிடு உன் பண்பாட்டை கட்டிகாக்க சல்லிக்கட்டில் இணைந்துவிடு - தீபாஸ்

Jallikattu
 

அந்நியனை வெளியேற்றினாய்-தமிழா

அவன் விதைத்த அந்நிய மோகத்தைமட்டும்

முளைகவிட்டதேனடா-தமிழா

முளைத்து காய்பழுத்து  பலகோடி

விதயை பரவவிட்ட தேனடா –தமிழா

அக் களைச்செடியை களையாததால்

நாடு காடாய் மாரியதடா -தமிழா

களைகள் பயிர்களை இன்று

களைஎடுத்ததடா –தமிழா

அதில் காணாமல் போனது

நம் அடையாளமும்தான் தமிழா

பருத்தியாடையை துறந்தான்

தமிழன் பருத்தியாடயை துரந்தான்

பாலீஸ்டரில் நுழைந்த தமிழன்

பகலினில் வெந்துமடிகிறானடா

பனைபானத்தால் மாண்டவருண்டோ?தமிழா

பனைபானத்தில் மாண்டவருண்டோ.

பனைபானத்தை துறந்தான் தமிழன்

சீமைசரக்கை கையில்எடுத்தானடா

குடல்வெந்து மடிந்தான் தமிழன்

குளிர்பதநீரை மறந்தான் இன்று

கோக்நஞ்சை  குடித்தானடா தமிழா

பனைவெல்லத்தை துறந்தான் தமிழன்

வெள்ளைநிறக் கரியை இனிப்பென்று

உண்டுவீங்கிப் போனானடா தமிழன்

பழங்கஞசியை மறந்தான் தமிழன்

துரிதவுனவால் ஆயுள் குறைத்தானடா

உண்ணும் உணவுமுதல் அவன்

உடுத்தும் உடைவரை தமிழன்

பண்பாடெனும் பயிரைத்துரந்தான்

அயல்நாட்டு மோகமெனும் அவன்

விதைத்த களைசெடியை இன்று

களையெடுக்க சல்லிக்கட்டு

காளைகலால் இன்று தமிழன்

களமிறங்க படியிறங்கினான்

என் தமிழ் இனத்தின் எழுச்சி

இன்று கண்முன்னால் சிளிற்குதடா!

தளர்ந்துபோகாதே தமிழா

மனம் தளர்ந்து போகாதே!

எளிதல்ல வெற்றி ஆனால்

எள்ளளவும் பின்வாங்காதே

சல்லிக்கட்டு போரை நீயும்

தொடர்ந்து செலுத்து தமிழா

கட்டுக்குலையாமல் முயன்று

தொடர்ந்து செலுத்து தமிழா

மறையுமோ தமிழன் பண்பாடு

மாண்டாவிட்டார்கள் தமிழ்மக்கள்

கொல்லவரும் அன்னியப்பேயை

காலையெனும் தெய்வம் தமிழனுக்கு

காட்டிகொடுத்துவிட்டது இன்று

காட்டிக்கொடுத்துவிட்டது

இலந்தாரி எனும் வேப்பிலை எடுத்து

உன்னை அடித்தது விரட்டி

தலைவிரித்தாடிய பேயை- ஆம்!

அன்னிய மோகப்பேயை தமிழன்

சல்லிகட்டு என்னும் போரில்

இருந்து துவங்கி உன்னை

விரட்ட  புறப்பட்டான் தமிழன்

முடியாது இந்த போர்! இனி

வெளிச்சமே என் இனத்துக்கு

முழுவதும் அந்நிய வேரறுத்து

தமிழ் பண்பாடுஎனும் பயிர்

இனி தழைத்து ஓங்கும்....

ஆம் தழைத்து ஓங்கும்...

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.