(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 04 - முதல் அழைப்பு - ரேவதிசிவா

Baby

கண்ணின் மொழியிலும்

கையின் மொழியிலும்

பொருளில்லா

பெரும்பொருள் கொண்ட சொல்லிலும்

பலவாறாய் அழைத்த பசுந்தளிரின்

பிள்ளை மொழியில் இன்புற்றவர்கள்

பக்குவமாய் தங்களை

உறவின் பெயரில்

அழைக்க  சொல்லி

கொஞ்சி கெஞ்ச...

போனால் போகட்டுமென்று

பெருமனதுடையவர் போல்

இதழ் பிரித்து

இதமாய்

கிள்ளை மொழியில்-நீ

கோர்த்த வார்த்தையை

கொஞ்சமாய் குரலெழுப்பி

அவர்களை உரிமையாக அழைக்க

அந்த அழைப்பின் சுகத்தில்

அனைவரும் திளைக்க

அத்தருணமும் மிக அழகியதன்றோ!

The above poem is dedicated to all children and their family members.

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.