(Reading time: 1 - 2 minutes)

கவிதைத் தொடர் - அழகிய தருணங்கள் - 03 - முதல் தொடுகை - ரேவதிசிவா

அம்மாவின் வயிறு பெரிதாக தெரிய

அதற்கு காரணம் நீ கேட்க?

அன்னையின் வயிற்றில் பாப்பாவெனக் கூற-நீ!

ஆரோடப் பாப்பாவென்றாய்?

உன் பாப்பாவென்றதும்

உவகையில் துள்ளி குதித்து

உற்சாகமுடன் சென்றாய் வெளியே!

 

பெரும் பதவி கிடைத்தவன் போல்

பலரிடம் சொல்ல

உன் நண்பன்

உன் பாப்பா எப்ப வருவாவென்று வினவ

ஓடி சென்றாய் அன்னையிடம்!

 

பரிவுடன் பார்த்த தாயிடம்

பாப்பாவின் வருகையை கேட்க

சிரித்துக்கொண்டே

சில காலமாகுமெனச் சொல்ல

சிரசை அன்னையின் வயிற்றில் வைத்து

சீக்கிரம் வரனும் நீ!

சமத்துப் பாப்பா இல்லையா?

செல்லங் கொஞ்சிவிட்டு சென்றாய்...

 

காலத்தின் மாறுநிலையைப் போல்

கெஞ்சலும் கொஞ்சலுமாய்

மாறி மாறி

மன்றாடினாய் !

முகமே காணா -உன்

முதல் குழந்தையிடம்!

முடிவிற்கு வந்தது

உன் வேண்டுதல்கள் அனைத்தும்!

 

அவளைப் பார்த்து

அகம் குளிர

ஆசையோடும் பயத்தோடும்!

உன் இளம் தளிர் போன்ற கையால்

அவள் பிஞ்சு விரல் தொட்டு மகிழ்ந்தாய்!

உன் தொடுகையில்

அவள் சிணுங்கி சிரிக்க

அத்தருணமும் மிக அழகியதன்றோ!

The above poem is specially dedicated to my brother

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.