(Reading time: 3 - 5 minutes)

கவிதை - யார் இவன்..! - சமீரா

boy

பேருந்து பயணம் என்னுள்

பேரலைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்..!

 எங்கிருந்து வந்தான்..! யார் இவன்..!

எங்கே செல்கிறான் இவன்..!

ஏதும் நான் அறியேன்..!

வேடிக்கை பார்த்த என்னை

வெகுவாய் நொடியில்

அவன் பக்கம் ஈர்த்துக்கொண்டான்..!

ஐந்து வயது பாலகனுக்கு இன்னும்

அன்னைமடியில் அடைக்கலம் ஏனோ..!

சிட்டுக்குருவியாய் பற்றிப் பறந்து

சுற்றித் திரியும் பருவமிதில்

சிறகொடிந்த பட்டாம் பூச்சியாய்

இவனோ முடங்கிக் கிடக்கிறான்..!

ஆர்வமிகுதி ஆட்டிப்படைக்க

அவனையே பார்க்த்தேன்..!

என் இதயமோ  கணமாய் எனக்கே..!

வளர்ந்தும் குழந்தையாய்

சுற்றும்  முற்றும் அறியாமலே

பட்டுப் பூவாய்  வாழ்நாள் நெடுகிலும்

வட்டமிட்டு சுற்றிவர

வழிவிட்ட விதியை  நொந்துகொள்வதா?

விடை தெரியவில்லையே..!

இத்தனை பெரிய தண்டனை

இம்மியளயும் வேண்டாமே உனக்கு..!

என் மனமோ  மண்டியிட்டது..!

அன்னைமடியில் ஆட்பரிக்கிறான்..!

ஏதோ உண்ணுகிறான்! உமிழ்கிறான்!

எச்சில் செய்கிறான்!

கொஞ்சம் கொஞ்சமாய் சிந்துகிறான்!

அருகில் நிற்பவர்களை

அன்னார்ந்து பார்க்கிறான்..!

அவர்களோ விலகி நிற்கின்றனர்..!

விட்டு விலகவோ! விரண்டோடவோ!

அவன் ஒன்றும்  ஆட்கொள்ளும்

தீரா வியாதியில்லையே..!

பக்கத்தில் நின்ற ஆடவனை

எட்டி நின்று  தட்டுகிறான்!

தாயோ தாவித்தடுக்கிறாள்!

குழந்தை அவனோ

குளறுபடியாய் ஏதேதோ சொல்கிறான்!

அவனோ! ஆடவனை மீண்டும்

அன்னையின் அரணை

அரை நொடியில் அறுத்தெறிந்து

ஆசையாய் பற்றுகிறான்..!

ஆடவனோ பதட்டமடைகிறான்!

கொஞ்சம் இடம்மாறுகிறான்!

கெஞ்சும் பாவனையில்

அன்னையவளோ நோக்குகிறாள்!

முகச்சுழிப்பும் வெட்டிவிடும்

ஒற்றை பார்வைத்  தீண்டல்..

நிச்சயம்! குற்றம் சாட்டிவிடும்

பாவணைத் தான் அது..!

உன் வீட்டில் இவன் ஒத்த

குழந்தை இருந்தால்

 உன் அணுகுமுறை இதுவா?

அடுத்தவன் பிள்ளை என்பதனாலோ

இத்தனை அலட்சியம் உனக்கு!

அன்னையவள் செய்வதறியாது

பாலகனை அடக்கமுடியாமல்

ஆற்றாமையும் வலியும் மேலிட

தன் மகவை தண்டிக்கவே முனைகிறாள்!

பாலகனோ அன்னையின் முகத்தை

கூர்ந்து பார்க்கிறான்..!

தவறையுணர்ந்து குழந்தையை

கட்டியணைத்து முத்தமிட

அவள் கண்ணீரோ கன்னத்தை

வருடிச் செல்கிறது!

தாயுமானவள் அவளோ

மனதை தொட்டுச் செல்கிறாள்!

உடைந்துக் கொண்டு வரும்

அவள் உள்ளமதை நாமும்

சிதைக்க வேண்டாமே!

அவன் ஒத்த குழந்தையிடம்

அனுதாபப் பட சொல்லவில்லையே!

நீ மனிதாபிமானத்துடன்

நடந்துக் கொள்ளலாமே..!

அவன் அன்னையின்றி நாளை

சமூகத்தில்  அடியெடுத்து வைக்கையில்

அவன் நிலை என்னவாகுமோ?

என் எண்ணவலைகள் அவனை

எண்ணி எண்ணி வலம் வருகையில்

நானோ கூனிக்குறுகுகிறேன்..

அவனுக்காய் அன்று நான்

ஏது செய்தேன்..!

அவனை கண்டது பிழையா?

என் கருத்தில் பிழையா?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.