(Reading time: 2 - 3 minutes)

கவிதை - எழுத்தறிவித்தவன் ஆசான் - சமீரா

teacher

பாதை மருங்கில் கட்டுப்பாடு ஏதுமின்றி

படர்ந்து கிடக்கும் பாறை

இடையூறாய் இருக்கையில்

இடித்து அகற்றப்படுவதே வாடிக்கை..!

மாணவர்கள் நாம்

மனம் போன போக்கில்

இலக்கின்றி பிறருக்கு

இன்னல் தருகையில்

சமூகமதில் தாழ்த்தப்படுவதே

தினம் நிகழும் வேடிக்கை..!

உளி படாத கற்கள் என்றுமே

சிற்பங்களாய் பிரகாசிப்பதில்லை..

கற்களுக்கு வலிக்கும் என

உளி தயங்கி நின்றால்

சிற்பங்கள் வடிக்க வழியேதுமிருப்பதில்லை..

வரையறைகள் ஏதுமின்றி

தடம்மாறி நாம் பயணிக்கையில்

ஆசிரியரின் சிறுகண்டிப்பு

அங்கே சித்திரவதைகளாவதில்லை..

தவறை சுட்டிக்காட்டி

சீர்த்திருத்திவிடுகையில் அவை

என்றுமே தண்டனையாவதுமில்லை..!

அனுதினமும்

அர்ப்பணிப்புகள் ஆயிரம் கடந்து

அறிவினையூட்டுவார்கள் ஆசிரியர்கள்..

மறை ஒழுக்க மாண்புகளை

உன் உடமையாக்கி

தன்னலம் மறந்து உன்நலம் காக்க

உழைப்பவர்கள் ஆசான்கள்..

உன் ஊதியத்தில் ஒருபகுதியை

அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை..

சமூகமது உன்னைக் கொண்டாட

உனக்கான தகுதியை வளர்க்கவே

முயற்சிக்கிறார்கள்..

கற்பித்தோருக்கு கண்ணியம் தன்னை

காலம் அது கடந்தாலும்

கொடுப்பதே கற்றவருக்கு கௌரவம் ..!

 

"Respect your teachers"

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.