Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
கவிதை - கண்ணீர்... - சமீரா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

கவிதை - கண்ணீர்... - சமீரா

crying

வார்த்தையில்லா மௌனங்களில்

வார்க்கப்படும் வெற்றுப் புன்னகை

உதடுகளில் ஒட்டாமல்

உதிரும் தருணங்களில்

மறைந்து நிற்கும்

மரணத்தின் எல்லை

இதுவென காட்டிய

இதயத்தின் வலி...

ஆழி கண்ட ஆழம் கூட

ஆழ் மனதினை விட குறைவு என்றே

ஆறாம் அறிவும் நம்பிவிடும்..

மறக்க துடிக்கும் வேதனை

மற்றவர் முன் மறைக்க

மனதோடு மண்டியிட்டு

கண்ணோடு கரிக்கும்

கண்ணீரையும் கட்டுப்படுத்துகையில்

சுற்றி இருக்கும் உலகத்தில்

சுதந்திரம் அற்ற பறவையாய்

நான் மட்டும் தனிமையுடன்..

உடைந்து அழவேண்டிய

உணர்ச்சி கூட உள்ளத்தினுள்ளே

சிறைவைக்கப்படுகையில்

சின்ன ஆறுதலாய் நித்திரைக்கான

நீண்ட காத்திருப்பில் தலையணை

நனைக்கும் கண்ணீர்..

 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sameera

Add comment

Comments  
# RE: கவிதை - கண்ணீர்... - சமீராViji. P 2019-03-27 08:10
ithayathin valiyai ithaivida yarum sirappaga koorividamudiyathu. Sutri irukkum vulagathil suthanthiram atra paravaiyai Nan mattum thanimayudan... Enakkave ezuthappatta varigal pondru vullathu. :yes: :thnkx: :thnkx: :
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கண்ணீர்... - சமீராJebamalar 2019-03-26 17:42
மிக அருமை... மனதின் வலியை படம்பிடித்து காட்டுவது போல் உள்ளது ஒவ்வொரு வரிகளும்... அனிச்சைச் செயலாக நீர் வடிகிறது கண்களில்
Reply | Reply with quote | Quote
# RE: கவிதை - கண்ணீர்... - சமீராரவை 2019-03-26 06:02
சுமீரா! வாவ்! இது ஒரு அற்புதமான, நெஞ்சைக் கவ்விய, ஆழமான கவிதை! அப்பப்பா! எவ்வளவு அருமையான சொற்கள்! இந்த சொற்களுக்காகவே அழவேண்டும்போல் இருக்கிறது! பணிவான பாராட்டுக்கள்! உங்க லெவலே வேறு! அண்ணாந்து பார்க்கிறேன், இந்தக் கிழவன்!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top