(Reading time: 2 - 3 minutes)

கவிதை -  நிலை மாற்றம்...! - சமீரா

transgender

ஆதியில் இவன்

ஆணாய் பிறந்து 

அணுவனுவாய் பெண்மையின்

அறிகுறிகளும் இசைவுகளும் 

அறிகையில் தன்னையே

ஆடவனாய் ஏற்கமுடியாமலும்

அடுத்தவர் மத்தியில் பெண் என

அடையாளப்படுத்திட இயலாமலும்

அனுப்பவித்திடும் கொடுமைகளை

அடக்கிட முடியாது அகராதியில்..

உடலியல் சுமக்கும் மாற்றங்களும்

உணர்வுகள் மரிக்கும் ஏமாற்றங்களும்

உள்ளுக்குள்ளே ஹோர்மோன் ஏற்றத்தாழ்வுகளும்

உயிர் போகும் எத்தனை போராட்டங்கள்..

உறவுகளும் ஒதுக்க

உதறிவிட்டு வந்தால்

மனிதம் மரணித்த

மனிதர்கள் ஒடுக்குவார்கள்..

ஒன்றாய் வாழ முடியாமல்

ஓடி ஒளியவும் தெறியாமல்

திணறி நிற்கையில்

திகைப்பூட்டும் மனித மிருங்களின்

கொடூர முகம்..

கொட்டும் தேள்களாய் நித்தம் 

இரத்தம் உறிஞ்சு 

இழிவு படுத்துவார்கள்..

இறைவன் விதித்த விதிக்கு

இவர்களை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்..

சகமனிதனுக்கான மதிப்பை கொடுக்க

சாலச்சிறந்த கல்வி கற்றுத்தறவில்லையா..? இல்லை

ஏட்டுக்கல்வி யதார்த்தத்துக்கு

எடுபடாது என்றே மறந்துவிட்டாயா..?

உன்னால் உதவமுடியாவிட்டாலும்

உதாசீனப்படுத்துவது சரியா..?

பண்பாடு உன்னிடத்தில் உள்ளதென்றால்

பண்பான தோழமையுடன் பழகு..

பழைமை பேசுபவர்கள் பேசட்டும்..

பலபேருக்கு உதாரணமாய் நீ இருந்தால்

பச்சிளம் பிள்ளையும் கற்றுக் கொள்ளும்

கண்ணியத்தை..

பால்நிலை மாற்றம் பரிகாசிக்க அல்ல..

புரிந்துகொள் பூரணமாய்..

உன்னைப்போல் உயிரும் 

உணர்வுகளும் கொண்ட மனிதர்கள் தான்..

கலங்கமால் சிலையாய் நிற்க

கருங்கல் பாறைகள் அல்ல அவர்கள் ..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.