(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வெறுமை - சமீரா

வேதனை என்று சொல்ல முடியாமல்

வெளியிலே யாரும் அறியாமல்

வெறுமையொன்று ஒளிந்து

உள்ளமதில் உறைந்து நிற்கிறது..

உதட்டில் படியும் புன்னகையும்

உணர்வுகள் பிரதிபளிக்கும் கண்களும்

காயங்களை காட்சிப்படுத்திடமால்

காக்கும் கவசம் தான்...

காண்பவரும் காரணங்கள் தேடாமல்

கடந்து போய்விடுவரே...

பகிர்ந்துக்க்கொண்டால் பாதியாய்

பட்டுப்போய்விடும் வலிகள் ..

என்று எண்ணும் போதெல்லாம்

அத்தனை நினைவுகளும்

ஆழிப்பேரலையாய் வெளிவருகையில்

அந்த சூழலில் சிக்கியே

மணிக்கணக்காய் மரணத்தை

யாசிக்க வேண்டி வருமோ..

அச்சமே அணுவணுவாய் கொல்கின்றதே

அரக்கனாய் இன்று...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.