(Reading time: 2 - 4 minutes)

கவிதை - நீயும் நானும்... - சமீரா

யாரோவாக உன்னை கண்டேன் அன்று..

யாதுமாகிப் போனாய் என்னில் இன்று..

அதிகாலை பொழுது விடிகையில்

 நீயே என் முதல் நினைவு..

அர்த்தராத்திரியில் நீயே என் நீழும் கனவு..

என்னவனாய் நீ இருந்தும்

எம்மை பிரித்து நிற்கும் இடைவெளி தூரமாய்..

அதுவே நம் ஆவலைத்தூண்டி ஏங்க வைக்க போதுமாய்..

உன் மீதான காதலும் என்னுள் அடங்கியிருக்கிறது ஆழிப்பேரலையாய்..

அனைத்தையும் மிச்சம் ஏதுமின்றியே

உரிமையாக்கிக்கொள்கிறாய்..

அனுதினமும் ஆயிரம் ஆசைகளை என்னுள் நீயே விதைக்கிறாய்..

சத்தமின்றி என்னையும் முழுமையாய் உன் அன்பினால் வீழ்த்துகிறாய்..

விதண்டாவாதம் பேசும் நானும் தான் மாறிப்போகிறேன் உன்னால்..

எனக்காய் நீ விட்டு கொடுத்து பேசுகையில்..

உன்னை மீண்டும் ஒருமுறை சந்திக்க உள்ளமதில் எழுகின்றதே பேராவல்...

எதிர்ப்பார்ப்பு இல்லையென்று சொல்வதற்கும் இல்லை..

ஏமாற்றத்தினை தவிர்த்திட எண்ணியே இருந்தேன்..

நீ வருவாய்  என்று உள்மனதில் சின்னதாய் ஓர் எண்ணம்..

ஆனாலும் நீ எனகாய்  மட்டும் வந்து நிற்பாய் என்றும் எதிர்பார்கவில்லை தான்...

நீ கொடுத்தது என்னவோ எனக்கு இன்ப அதிர்ச்சி தான்...

அத்தனை பெரும் நீளம்

நமக்கான சில நிமிடங்களுக்காய் கடந்து வந்திருந்தாய்...

என் இதயத்தின் மொத்த இடத்தினையும் அன்றே உனக்காய் தந்திருந்தேன்..

உரிமை கலந்த உன் உபசரிப்பில் உறைந்து போனேன் நான்..

என்னருகில் நீ இருக்கிறாய் என்பதே பேரானந்தமாய்..

என் பெண்மையும் கூட

உன் கண்ணியம் கண்டு  கர்வம் கொண்டது..

உன் மென்மையான காதல் பார்வை

என் நாணத்தையும் தட்டி யெழுப்பிக்கொண்டது..

உன்னைப் போல் கரம் பற்றும் பேராவல் தான் எனக்கும்..

இடம் பொருள் எல்லாம் நம்மிடையே இடையிட்டு நின்றதே நமக்குள்..

நீ பேசியது என்வோ சில நிமிடங்கள் தான். ..

அதுவே இன்றுவரை என்னுள் ஆயிரம் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறதே..

நாம் இணைந்து வைத்தோம் சில அடிகள் தான்...

ஆயுள் முழுதும் கரம் கோர்த்து தொடரட்டும்

 நம் காதல் பயணம் தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.