(Reading time: 1 minute)

கவிதை - நீயே!  உன்னை செதுக்கி விடு...! - சமீரா

Crossing mountains

உனக்குள் எதிர்ப்பார்புகள்  

எட்டிப் பார்க்கும் பொழுது

உன்னை ஏமாற்றங்கள்

எடை போட எத்தணிக்கும்..!

 

அடுத்தவரிடம் ஆறுதலை

தேடும் நேரம்

உன் பலவீனம் உன்னை

மிஞ்ச காத்திருக்கும்..!

 

சிறு பின்னடைவுக்கும்

நீ துவண்டு போனால்..

உன் தன்னம்பிக்கை

தட்டி தாழ்த்தப்படும்...!

 

உனக்கான பாதை உன்னால்

வரையப்பட்டால் தான்!

உன் பயணம் வெற்றியை

நோக்கி வீரநடை போடும்..!

 

உன் தோல்வி தொடர்வதற்கில்லை

துடைத்தெறியத்  தான்..

விழிப்போடு போராடு

விடியல் உன் பக்கம் தான்..!

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.