(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வன்முறையிலும் கொடூரம் - சமீரா

Stop hurting

கன்னியவள் கணவனுக்காய்

கண்ணியம் காக்கும் கற்புதனை

கழுகாய் வட்டமிட்டு

கயவனவன் களவாடும்     

கலாச்சாரம் இன்றோ கலியுகத்தில்...!

 

பருவ மங்கையவள் பழிதீர்க்கும் பாரினில்

பகையறியாத பச்சிளம் பிள்ளையும்

பாதிக்கப்படுவதும் அந்தோ பரிதாபம்!

பாவப்பட்டவள் பாவையாக

பிறந்தது தப்பென்று கண்டதனாலோ?

 

ஆடவன் பெண்னவளுக்கு

அரனென்று அன்றோ கூறியிருக்க

அரனே அத்துமீறும் அவலத்தை

அநியாயமாய் அரங்கேற்றும் ஆணாதிக்கமே!

ஆணினத்துக்கே அவப்பெயர் நீயல்லவா?

 

நங்கையவள் மென்மையென

நானிலம் போற்ற வன்மையினால்

வனிதையவளை வதைத்து

வஞ்சம் தீர்த்துக் கொள்(ல்)வது

வன்முறையிலும் கொடூரமல்லவா?

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.