(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நெஞ்சு பொறுக்குதில்லையே.. - வசுமதி

சுதந்திரப்பறவையாய் சுதந்திரவானில்

சுற்றித்திரிந்த சுந்தரிப்பெண்..

சுதந்திரநாட்டில் சிதிலமடைந்து

சிலைந்திவலையில் சிக்கிகொண்டாள்..

 

பட்டாம்பூச்சியாய் பறந்துகொண்டிருந்தவளை

வலைவிரித்துக் கடத்தியது கயவர்க்கூட்டம்..

காகிதமாய் கிறுக்கி கசக்கியெறிந்தனர்

ஒரு விபச்சார விடுதியில்..

 

ரணமான உடல் வலிக்க வலிக்க

இமைகள் திறக்கமுடியா மரணவலியில்..

பல கைகளால் நினைவில்லாப்

பொழுதுகளில் தீண்டப்படுகிறாள்..

 

நாட்கள் பத்து கடக்க

பத்துப் பேர் முன்னிலையில் பெண்ணவள்

தன்னிலைபெற்று தன்னிலையுனர்ந்து

சாகதுடிக்கிறாள் அந்நொடியே..

 

எழமுடியா நிலையில் தன்னுடலிருப்பது

அறியாதவளாய் மங்கையவள் எழ

தாங்கதொடங்கியது அவளைச் சுற்றியிருந்த

அப்பத்துக் கரங்கள் அவள் கதறுவதை பொருட்படுத்தாமல்..

 

மயக்கமும் வலியும் பயமும்

அழுகையும் கதறலும் கெஞ்சலும்

கோபமும் வன்மையும் துன்பமென

நத்தையாய் நகர்ந்தது நாட்கள்..

 

நரக வேதனை தாளாமல் நரகம்விட்டு

தப்பிக்கத் துணை தேடியது பெண்நெஞ்சம்

அடுத்த பயணமும் நரகத்தை

நோக்கியேயென அறியாமல்..

 

உடனிருந்த மங்கையின் உதவி

நாடினாள் அந்த அறியாப்பெண்..

உதவ முதலில் மறுத்த மற்றவள்

பெண்ணவளின் வேதனையுனர்ந்து

அவளைத் தப்பிக்க வழி செய்து கொடுத்தாள்..

 

அமாவாசை இரவில் மற்றவள் உதவியுடன்

சுவரேரி குதிதவள் கால் போன போக்கில்

இரயிலேறினால் தன்னிடம் மற்றவள்

கொடுத்த சில்லரையால் செல்லாக்காசாய்..

 

யாருமறியாமல் முகமூடி பிறந்தகமடைந்து

முகம்பார்க்க முடியா வேதனையில்

பெற்றவர்களிடம் கதறுகிறாள்

அடுத்தென்ன என்பதறியா கேள்விக்குறியாய்..??

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.