(Reading time: 2 - 3 minutes)

கவிதைத் தொடர் - அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 04. நிலவின் மடியில் - வசுமதி

moon

சாளரம் வழி சாரலாய்

வன்னநிலவின் வெள்ளிக் கிரணங்கள்..

தென்னை மரமொன்று அதனை மறைக்க

முழு அழகு நினலவை ரசித்திட

நிலாமுற்றம் நோக்கி நகர்ந்தது என் கால்கள்..

நிலவு பெண்ணை இரசிக்கச்சென்ற என்னை

சிலையானேன் சிலநிமிடம்

நிற்கவைத்தாள் எனது நிலாப்பெண்..

வானிலாவிற்கு போட்டியாய்

வானவில் உடையணிந்து நின்றவளைக் கண்டு

என்னிதயத்தில் இனிமையாய்

இளையராஜாவின் இன்னிசைகள்..

தேவதைப் பெண்ணருகில்

என்னையறியாமல் நகர்ந்தது

என் கால்கள் என்றால் கண்களோ

அதிசயமாய் இங்கு நீ எங்கு..?? என்பதாய்

கேள்விக் கணையை தொடுத்தது..

அதற்கு பதிலாய்

என் தங்கையை சுட்டிக் காட்டியது  

என்னவளின் விற்புருவம்..

தமிழவள் பெயரைக் கேட்டாலே

மெய்யுருகும் நான்

அவளது புருவ அசைவில்

வீழ்ந்துபோனேன் அவள் காலடியில்..

எங்கள் மோன நிலையை கலைக்க

வந்து சேர்ந்தது எங்கள் வீட்டுக் கரடி..

ஆம்..

கரடிபோல் கனியவளை இரசிக்கவிடாமல்

இழுத்துச் சென்ற தங்கையின் மேல்

குதறிவிடும் கொலைவெறி..

என்னை விட்டு அவள் நீங்கியது பொறுக்கமாட்டாமல்

ஏங்கியது எனது இதயம்...

என்னெண்ணம் என்னவளை சேர்ந்ததோ என்னவோ..??

கடைக்கண் பார்வையொன்றை என்மேல் செலுத்தி

வருகிறேன் என்பதுபோல் தலையசைத்து

காதல் கடலில் முச்சுமுட்ட மூழ்கவைத்து

சட்டென இடைத்தை காலி செய்தாள்

என் உயிரில் கலந்த எனது இனிய தமிழ்..!!

தமிழமுதன்...

அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 03

அவளும் நானும் அமுதும் தமிழும்..!! - 05

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.