கவிதை - என்னவன் - திவ்யா பிரபாகரன்
முதல் சந்திப்பில் அவன் விழிகண்டு நான் நாணுவதை ரசிப்பவனோ ...
மெல்லிய உரையாடலில் சிநேகம் வளர்ப்பவனோ ...
மாலையுடன் தாயின் அரவணைப்பை பிரிகையில் ,
என்னை கைகோர்த்து அணைப்பவனோ ...
என் ஆசைகளை தனது கனவாக்கி செயல்படுபவனோ ...
அவனருகே என்னை மீண்டும் மழலையாக்குபவனோ ...
ஊடல் பொழுதிலும் காதலிப்பவனோ ...
அவன் சமைத்து நான் உண்பதைக்கண்டு மகிழ்பவனோ ...
விளையாட்டில் நான் ஏமாறுவதைக்கண்டு சிரிப்பவனோ ...
களைத்து கண் அசருகையில் என்னை மார்போடு சேர்ப்பவனோ ..
நான் மனம்வாடுகையில் நகைத்து , என் புன்னகையில் ஆனந்தம் காண்பவனோ ...
ஒவ்வொரு காலையும் என் முகம் பார்க்க ஏங்குபவனோ ...
இரவு வேளையில் என் நினைவுகளோடு உறங்குபவனோ ...
இவ்வாறு நான் நேசித்த கனவுகளின் உருவமாய் நிற்கின்றான் என்னவன்.
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
