கவிதைத் தொடர் - 06. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்
என்னவனின் காதல் முகம்

பிரென்ட்ஸ், திங்கள் பதிவு செய்த கவிதை இந்த தொடரின் முதல் கவிதை. புதிய கவிதையை பதிவு செய்வதற்கு பதில் தவறாக அந்த கவிதையை பதிவு செய்து விட்டோம்.
தவறுக்கு வருந்துகிறோம்.
இதோ, ஆறாவது கவிதை உங்களுக்காக!
உன் நினைவொடு
தூங்கியதால் தான் வந்ததோ
உன் முகம் கனவினில்?
இப்படி ஒரு கனவு வந்தால்
காலம் முழுவதும்
துயில் கொள்வேனே என்னவனே!!!!!!!!!
உன் முகம் காண
துடிக்கும் மனதை அடக்க
போராடும் நான், உன்
முகம் கண்டால் இந்த பிறவியின்
பலனை அடைந்தது போல
உயிரை துறப்பேனே என்னவனே!!!!!!!!!
அழகான பூஞ்சோலை போன்று
புன்னகை சிந்தும்
உன் அழகு முகம்
வெறுப்பை சிந்துவதை
கண்டால், அன்று நான்
இறந்திருப்பேன் என்னவனே!!!!!!!!!
உன் முகத்தை மெளனமாக
ரசிக்க கூட விடாமல்
கண்களை பார், உதடுகளை பார்
என்று துன்புறுத்தும்
என் மனதையே
நான் வெறுக்கிறேன் என்னவனே!!!!!!!!!
என் மீதான காதலை சிந்தும்
உன் முகம் பார்க்கும்
அழகான தருணம்
மட்டுமே என்
வாழ்வில் வசந்த காலமும்,
மழைக்காலமும் என்னவனே!!!!!!!!!
முதல் பார்வையிலே
பச்சை குத்தி உன்
முகத்தை என்னுள்
ஆழமாக பதிக்க
எப்படி உன்னால்
முடிந்தது என்னவனே!!!!!!!!!
உன்னை பார்ப்பதை
நிறுத்தி கொண்டால் என்
கண்ணில் இருந்து மறையும்
உன் முகம் என் அக
கண்ணில் கூட தெரிவது
எப்படி என்னவனே!!!!!!!!!
உன் நேச முகம்
மட்டும் என்னுள் அழகு
சிற்பமாய், ஆழமான
ஓவியமாய் பதிந்திருக்கும்
உண்மையை எப்போது
நீ அறிவாய் என்னவனே!!!!!!!!!
உன் மடியில் தலை
சாய்த்து, உன் முகத்தை
பார்த்து கொண்டே
உயிர் பிரியும்
வரம் பெற தவம்
இருக்கிறேன் என்னவனே!!!!!!!!!
நான் இது வரை
பார்த்திருந்த எந்த முகம்
கண்ணை விட்டு மறைந்தாலும்
உந்தன் திருமுகம்
மட்டும் என் நெஞ்சை
விட்டு மறையாது என்னவனே!!!!!!!!!
முகம் பார்க்கும் கண்ணாடி
என் முகத்தை
மறைத்து, உன் உருவத்தை
பிம்பமாக்கி காட்டுவது
காட்டுவது தான்
காதல் விந்தையோ என்னவனே!!!!!!!!!
உன் திருமுக வடிவை
வைத்து தான் தெரிந்து
கொண்டேன், அழகும்
கம்பீரமும் பொருந்திய
ராஜா உன்னை போல்
இருப்பாரென்று என்னவனே!!!!!!!!!
சுட்டெரிக்கும் சூரியனும்,
குளிர் நிலவும்,
அழகான மன்மதனும்
கூட தோற்று தான்
போவார்கள், உந்தன்
முக அழகில் என்னவனே!!!!!!!!!
ஒளிரும் நீல முகம்
கொண்டவனே, நீ மட்டும்
அழகு பொருந்திய
சுந்தரனாய் வயதானாலும்
தெரிவாய் எந்தன்
கண்களுக்கு என்னவனே!!!!!!!!!
நிலா காயும் நேரத்திலே,
அந்தி வேளையிலே
உன் திருமுகம்
தெளிந்த நீரில்
பிரதிபலிப்பதை கண்டு
அசைய மறந்தேனே என்னவனே!!!!!!!!!
தெளிந்த நீரில் தெரியும்
உந்தன் பிம்பம், காற்றின்
அசைவுகளால் சலனத்தை
ஏற்படுத்தினாலும் உன் முகம்
மட்டும் தெளிவாக தெரிவதின்
காரணம் என்ன என்னவனே!!!!!!!!!
கவிதை சிந்தும் உந்தன் காதல் முகம்
காந்தமாக ஈர்க்கும் உந்தன் முகம்
நேசமாய் நினைவில் வரும் உந்தன் முகம்
புன்னகை சிந்தும் உந்தன் முகம்
என அனைத்தையும் ரசிக்கிறேன் என்னவனே,
இவை அனைத்தும் கற்பனையில் மட்டுமே
உண்மையாக உன் திருமுகம் காண தான்
தவம் இருக்கிறேன் என்னவனே!!!!!!!!!
என்னவனுக்கான தேடல் தொடரும் .....
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.