(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர் - 04. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன் 

என் குரல் கேட்கிறதா என்னவனே

Eyes

கானகத்தில் தொலைந்த

சிறு குழந்தையாய்

தவிக்கும் நேரத்தில்

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

காதலோடு  நீ

பார்க்கும் ஒவ்வொரு

தருணத்திலும் என்னருகில்

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

உந்தன் நெஞ்சில் சாய்ந்து

உன் வாசனை முகர்ந்து

உன்னை முத்தமிட

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

அந்தி சாயும் வேளையில்

உன் மார்பில் துயில் கொண்டு

என் தூக்கத்தை தொடர

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

காதல் என்னும் பேரலையில்

அடித்து செல்லும் வேளையில்

உன் வாசம் தேட

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

  

காந்தமாய் இழுக்கும்

உன் கண்களை அருகில்

இருந்து பார்த்து ரசிக்க

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

மழையின்  நீர் துளிகளோடு

நிற்க்கும் உன்னை என்

முந்தானையில் முகம் துடைக்க

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

தோளொடு தோள் உரசி

நடக்கும் வேளையில்

என் கை கோர்க்க

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

உனக்காக தவிக்கும்

வேளைகளில்  துடிக்கும் என்

உதடுகளை சிறை செய்ய

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

உன் சட்டை வாசம்

நான் முகர என்னோடு

உன்னை இறுக்கி கொள்ள

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

உன் புன்னகை சிதறல்களை

சேமிக்கும் வண்டாய்

இருக்கும் நான்

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

சுட்டெரிக்கும் வெப்பத்தில்

வெந்திருக்கும் என்னை

குளிர் நிலவாய் அணைக்க

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

ஒற்றை வரி  கவிதையாய்  

பொருள் இல்லாமல் இருக்கும் 

எனக்கு அர்த்தம் கொடுக்க

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

நீ சிந்தும் 

நேச தூறலில் 

மனம் நனைய

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

 

என் மன்னவனின் 

நீங்காத நினைவுகளில் 

தவிக்கும் நான் 

வா என்று அழைக்கும்

என் குரல் கேட்கிறதா என்னவனே !!!!!!!!!

என்னவனுக்கான தேடல் தொடரும் .....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.