(Reading time: 2 - 3 minutes)

கவிதை - நான்- முதுமைத்தாய் - சிந்தியா ரித்தீஷ்

Mom

தினமும் என்னுள் நிகழும் மாற்றம்
உணர்விலும் என் உயிரிலும் உன்னால்

உனது வருகை உணர்த்தும்
என்னுள் புதைந்த தாய்மையை

துடித்திரும் மானாய் நானும் திரிகையில் 
தடுத்திடும் தடுப்பாய் வந்தாய் 

சுமையறியாமல் சுமக்கும் சுகத்தை
என்னுள் உருவாக்கினாய்

கணநேரம் பிரிய நேர்ந்தாலும்
கலங்கிடும் என் விழிகளிற்கு

உன் வார்த்தையின் ஜாலங்கள்
மயிலிறகாய் வருடிடும் மாயம்

மழலையாய் நீயும் குழைகையில்
குளிர்ந்திடும் என் உள்ளம் சிறிது

காலங்கள் கடந்திட, உன் கால்கைகளும் வளர்ந்திட

தத்தித் தத்தி நீ நடக்கும் அழகைக் காண 
கண்கோடி நான் கடன் கேட்க வைத்திட்டாய்

நிலையாய் நீயும் இடம்பெற்று 
நிமிர்ந்து நடந்திட 
சமுகம் உன்னைச் சேர்த்து 
வளர்த்தது

நீயும் காலூன்றினாய் இந் 
நிலையில்லா உலகில் 

மெதுவாக நானும் முதுமைக்கு 
நகர்ந்திட 
நீயும் பல்கி பெருகினாய்
வாழையடி வாழையாய்

காலங்கள் மாறிடும் ஆனால் என் கண்ணின் மணியான நீ 
மாறவில்லை என்றும் எனக்கு

என்கையில் பாவையாய்
உனை நானும் பார்த்திட
உன் பாதியவளோ உன்னை
களைந்திட்டாள் என்னிடமிருந்து

குருவியும் பறந்துவிடும் 
சிறகு முளைத்தால் 

நீயும் பிரிந்திட்டாய் 
சிறு பாரம் மீண்டும்

என் சுகமான சுமையான உனக்கு
சுமையான சுகமாக நான்
மாறவிரும்பவில்லை

இதோ கிளம்பிவிட்டேன் நானும் 
இன்று 

இதோ சில நொடிகள் 
என் தாள் நனைத்த பேனைக்கும்
என் கண்ணின் துளிகளுக்கும்
விடைகொடுத்து  ......

*காலனை நோக்கி நடக்கும்
நான் - முதுமைத்தாய்*

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.