(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதலா இதுவும் - சிந்தியா ரித்தீஷ்

dreams

உன் கரு நீல விழிகளினுள்
மாயமாக நான் 

மறையத்
தவமிருக்கும் 

தருணங்களும்

தவிர்த்திட முடியாமல்

தவித்திடும் 

உன் நயன நடனங்களும் 

ஒருங்கே அரங்கேறுகின்றன
என் கனவுத் திரையரங்கில்.....

 

சில நேரம் சிரித்திடும்

உன் இதழ்கள் 

என் சிந்தையை மறைத்து 
அழவைக்கும் பல தருணங்கள்


காதலா இதுவும் எனத்துடிக்கும்
மனதிடம் இல்லை என 
மறுக்க மாட்டால்
ஆம் எனவும் கூறாமல்
இழுத்தடிக்கிறது மூளை..

 

இருந்தும் 

போர்தனை நிறுத்தாது
விரதம் இருக்கும் மனத்திடம்
என் சொல்வேன் நான்
நீ இருந்தும் இல்லையென.......

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.