Page 1 of 5
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 11 - சசிரேகா

பசி வந்துவிட்டால்
ருசி தேவையில்லை
காதல் வந்துவிட்டால்
காலம் தேவையில்லை
காதலை சொல்ல
எதற்கு ராகு(காலம்)வையும்
எம(கண்டம்)னையும்
நான் பார்க்கவேண்டும்
என் காதல் என் விருப்பம்
அதை அவளிடம் சொல்ல எண்ணுகிறேன்
இன்று கரிநாளா
சந்திராஷ்டமமா
என ஏன் பார்க்கவேண்டும்
என் மனதில் காதல் வந்த
போது இந்த ராகுவும் எமனும்
எங்கு இருந்தார்கள்.
கரிநாள் பார்த்தா காதல் பிறந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
முதல் காதல்
பிஞ்சு மொழியில்
நீ பிழையாக பேசிய வார்த்தைகளில்
அத்தான் என நீ குளறியபடி
உச்சரித்தாயே
அப்போது வந்தது உன்மீதான
என் முதல் காதல்